பொது செய்தி

தமிழ்நாடு

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கடம்பத்துார்: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், நெற்பயிருக்கு, ஜூலை, 31ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என, கடம்பத்துார் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துஉள்ளார்.

கடம்பத்துார் வட்டாரத்தில், சொர்ணவாரி பருவத்தில், 2,500 ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.இதில், நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் நெற் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, 601 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.இந்த பிரீமிய தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பிரீமிய தொகையை வரும், ஜூலை, 31ம் தேதிக்குள் செலுத்தலாம்.

மேலும், உளுந்து, பச்சைப் பயறு, வேர்க்கடலை, கம்பு, எள், வெண்டை, கத்திரி ஆகிய பயிர்களுக்கு, ஜூலை, 31ம் தேதியும், துவரை பயிருக்கு ஆகஸ்ட், 16ம் தேதியும், வாழைக்கு, ஆகஸ்ட், 31ம், தேதியும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.இதற்கு, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், தற்போது சாகுபடி செய்திருக்கு பயிருக்கான சிட்டா, அடங்கல் மற்றும் முன்மொழி படிவம் ஆகியவற்றுடன் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.மேலும், தங்கள் பயிர் மகசூல் இழப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு, கடம்பத்துார் வேளாண் உதவி இயக்குனர் சங்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X