சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

திருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், திருத்தணி சலவை தொழிலாளர் சங்கத்தினர், நிவாரண தொகை, இலவச வீட்டு மனை பட்டா உட்பட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, 80 பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, 'சலவை தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை, 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.'ஏற்கனவே சலவை தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை, வருவாய் துறையினர், கிராம கணக்கில் சேர்க்க வேண்டும்.'சொந்த வீடு இல்லாத சலவை தொழிலாளர் குடும்பத்தினருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்' என, கண்டன கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, சலவை தொழிலாளர்கள் மேற்கண்ட மூன்று அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, வருவாய் கோட்டாட்சியரிடம் மனுவும் கொடுத்தனர். ஆர்ப்பாட்டம், சங்கத் தலைவர் நதியா தலைமையில் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X