ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு கொரோனா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு கொரோனா

Added : ஜூன் 09, 2020
Share

ஊத்துக்கோட்டை: தனியார் பள்ளி ஆசிரியருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவரது குடும்பத்தில், மேலும், நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஊத்துக்கோட்டை இ.சி.ஐ., சர்ச் தெருவில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், அவரது வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது வீட்டிற்கு வந்தவர்கள் யார், யார் என, சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 12 பேருக்கு, கொரோனா தொற்று குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், தனியார் பள்ளி ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, அவர்கள், தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.ஒரே தெருவில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து பேருக்கு, கொரோனா தொற்று வந்ததால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X