தமிழ்நாடு

நடிகர் வரதராஜன் மீது வழக்கு பதிவு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சென்னை : நடிகர் வரதராஜன் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் செய்தி வாசிப்பாளரும், நாடக நடிகருமான வரதராஜன், 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், படுக்கை வசதி இல்லை' எனக்கூறி, 'வீடியோ' ஒன்றை, நேற்று வெளியிட்டார். இது, சமூக வலையதளங்களில் வேகமாக பரவியது.

இது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, 'உண்மைக்கு புறம்பான தகவலை வரதராஜன் வெளியிட்டுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.

இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குனர், கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் படி, நடிகர் வரதராஜன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X