மது விற்ற இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற இருவர் கைது

Added : ஜூன் 09, 2020
Share
ஐஸ்ஹவுஸ் : காரில் பதுக்கி, மது பாட்டில் விற்பனை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர். ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று முன்தினம், காவல் எல்லைப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திருவல்லிக்கேணி, அனுமந்தபுரம், வி.ஆர்.பிள்ளை தெருவில், காரில் மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்ட, அதே

ஐஸ்ஹவுஸ் : காரில் பதுக்கி, மது பாட்டில் விற்பனை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று முன்தினம், காவல் எல்லைப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திருவல்லிக்கேணி, அனுமந்தபுரம், வி.ஆர்.பிள்ளை தெருவில், காரில் மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 32, மயிலாப்பூர், கணேஷ் சாலையைச் சேர்ந்த கணேஷ், 30, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 180 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X