விதிமீறல் தொடர்பாக 536 வழக்கு பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் தொடர்பாக 536 வழக்கு பதிவு

Added : ஜூன் 09, 2020
Share
சென்னை : சென்னையில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, போலீசார், 536 வழக்குகள் பதிவு செய்து, ஆட்டோக்கள் உட்பட, 31 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.ஊரடங்கு அமலில் இருப்பதால், வெட்டியாய் ஊர் சுற்றுபவர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து, சென்னையில், நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலிக சோதனை மையங்கள் அமைத்து, வாகன

சென்னை : சென்னையில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, போலீசார், 536 வழக்குகள் பதிவு செய்து, ஆட்டோக்கள் உட்பட, 31 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கு அமலில் இருப்பதால், வெட்டியாய் ஊர் சுற்றுபவர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து, சென்னையில், நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலிக சோதனை மையங்கள் அமைத்து, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை, 6:00 மணி வரையிலான, 24 மணி நேரத்திற்குள், போக்குவரத்து விதிகளை மீறியதாக, போலீசார், 536 வழக்குகள் பதிவு செய்து, ஆறு ஆட்டோக்கள் உட்பட, 31 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X