தமிழ்நாடு

4,000த்தை நெருங்கியது ராயபுரம் மண்டலம்; தொற்றின் வேகத்தால் சுகாதார துறை கலக்கம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
 4,000த்தை நெருங்கியது ராயபுரம் மண்டலம்; தொற்றின் வேகத்தால் சுகாதார துறை கலக்கம்

ராயபுரம் : ராயபுரத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 4,000த்தை நெருங்கும் நிலையில், நான்கு மண்டலங்களில் அதிவேகமாக உயரும் எண்ணிக்கை, சுகாதார துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.

சென்னையில், 22,149 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த மாநில பாதிப்பில், 70 சதவீதமாகும்.சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில், தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இங்கு, நேற்று வரை, 3,859 பேர் வரை பாதிக்கப்பட்டுஉள்ளனர். மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இந்த மண்டலத்தில், மக்கள் தொற்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

கடந்த இரு நாட்களாக, பாதிப்பு எண்ணிக்கை, முறையே, 165, 142 ஆக உள்ளது. இதே எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்படும் பட்சத்தில், இன்று, ராயபுரம் மண்டலம், 4,000 என்ற எண்ணிக்கையை கடக்கக் கூடும்.நடுக்கம்ராயபுரம் மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியில் உள்ள, திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும், தொற்று எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்வதால், சுகாதார துறையினர் நடுங்கி போயுள்ளனர்.

அதன்படி, தண்டையார்பேட்டையில், நேற்று வரை, 2,835 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில், 2,518 பேரும், கோடம்பாக்கத்தில், 2,431 பேரும், திரு.வி.க.நகரில், 2,167 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தவிர, அண்ணாநகர் மண்டலமும், 2,000த்தை நெருங்கியுள்ளது. இங்கு, நேற்று வரை, 1,974 பேர் தொற்றால் பாதித்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், இந்த ஆறு மண்டலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 71 சதவீதமாகும்.தவிர, ஆயிரத்தை கடந்த மண்டலங்களாக, அடையாறு, வளசரவாக்கம் மண்டலங்கள் உருவெடுத்துள்ளன. இங்கு, முறையே, 1,274 மற்றும் 1,054 பேர் என, தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X