சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' அச்சத்தில் 'கொடை'வாசிகள்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கொடைக்கானல் : கொடைக்கானலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் 75 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இரண்டு மாதமாக நோய் தொற்று இல்லாத நிலையில் கடந்த வாரம் சென்னையில் இருந்து வந்த பள்ளி மாணவி மூலம் தொற்று எண்ணிக்கை துவங்கியது. இதுவரை பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. குளிர் பிரதேசமான கொடைக்கானலில் கொரோனா வைரஸ் மிக விரைவில் பரவும் என்ற அச்சம் பொது மக்களிடையே நிலவுகிறது.ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த பின் வி.ஐ.பி.,க்கள் 'இ-பாஸ்' பெற்று வரத் துவங்கியுள்ளனர்.

சோதனை சாவடியில் பெயரளவில் மட்டுமே 'வி.ஐ.பி.,'க்களை பரிசோதிப்பதால், கொரோனா பரவ துவங்கியுள்ளது. கொரோனா பாதித்த நபர், சென்று வந்த இடங்களை கண்டறியும் பணியால் சுகாதாரத்துறைக்கு மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. வி.ஐ.பி.,க்களை பரிசோதிக்காமல் இருக்க சில பல கவனிப்புகளும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீடிக்கும் நிலையில், சென்னை உட்பட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை கொடைக்கானலுக்கு வருவதை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X