பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

தாம்பரம் : காஞ்சிபுரம் மாவட்ட, நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு. மே மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ், 400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், பண்ணை பசுமை காய்கறிக் கடைகள், பெட்ரோல், 'பங்க்'கள், சிறிய சிறப்பங்காடிகள் மற்றும், 'அம்மா' மருந்தகங்கள் ஆகியவை உள்ளன.இவற்றில், 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் வரை, 1ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக, கால தாமதமாகவே, சம்பளம் வழங்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் கூறியதாவது:ஜனவரி மாதத்திற்கு பின், ஒவ்வொரு மாதமும், 6ம் தேதிக்கு பிறகே, சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாதத்தை பொறுத்தவரை, நேற்று வரை, சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால், உயர் அதிகாரி கள் மற்றும் தலைமை அலுவலக பணியாளர்கள் மட்டும், ஒவ்வொரு மாதமும், 1ம் தேதி சம்பளம் பெறுகின்றனர்.கொரோனாவையும் பொருட்படுத்தாமல் பணிபுரியும் எங்களுக்கு மட்டும், சரியான நேரத்தில் சம்பளம் கிடைப்பது இல்லை.இது குறித்து கேட்டால், அதிகாரிகளும் சரிவர பதிலளிப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயண படியும், 'அம்போ!'

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படும் முன், பண்டக சாலையில் பணிபுரியும், அனைத்து ஊழியர்களுக்கும், 200 ரூபாய் பயணப்படி வழங்கப்படும் என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவித்தார்.முதல், 20 நாட்களுக்கு மட்டுமே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, பயணப்படி வழங்கப்பட்டது. அதன் பின், அவர்கள் மட்டுமின்றி, பண்டக சாலையில் பணிபுரியும், எந்தவொரு ஊழியருக்கும், இன்று வரை பயணப்படி வழங்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X