பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் சாலை பணிகள்; நெடுஞ்சாலைத்துறை துவக்கம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
 சென்னையில் சாலை பணிகள்; நெடுஞ்சாலைத்துறை துவக்கம்

சென்னை : சென்னையில், சாலை மேம்பாட்டு பணிகளை, நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் துவங்கி உள்ளனர்.

சென்னையில், ஜி.என்.டி., சாலை, ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட, 200 கி.மீ., சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இந்த சாலைகளில், கால முறை புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, அரசு உத்தரவிட்டு இருந்தது. இதுமட்டுமின்றி, பல சாலைகளில் மழைநீர் வடிகால், கல்வெட்டுக்கள் உள்ளிட்டவை அமைக்கவும், திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஒப்பந்ததாரர் தேர்வை, நெடுஞ்சாலைத்துறையினர் நடத்தி முடித்திருந்தனர்.

ஊரடங்கு காரணமாக இந்த பணிகளை, 60 நாட்களுக்கு மேலாக துவங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் வாகன நடமாட்டம் அதிகரித்துள்ளது.எனவே, குறைந்த அளவிலான ஊழியர்களை பயன்படுத்தி, சமூக இடைவெளியுடன், சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி உள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, சாலை புனரமைப்பு பணிகள், இரவு நேரத்தில் முழுவீச்சில் நடக்கிறது. இதேபோல, நுாறடிச்சாலையில், செந்தில்நகர், அம்பாள்நகர், வேங்கைவாசல் சாலையில் சிட்லபாக்கம், உள்ளிட்ட பல இடங்களில், வடிகால் கட்டும் பணிகளும் துவங்கி உள்ளன. இந்த பணிகளை, பருவமழைக்கு முன்பாக முடிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X