பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வுக்காக சென்னை வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
 தேர்வுக்காக சென்னை வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

சென்னை: பொதுத்தேர்வில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களில் தங்கியிருந்த, மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு பேருந்து மூலம் நேற்று சென்னை வந்தனர்.

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, வரும், 15ம் தேதி துவங்கும் என, அரசு அறிவித்து உள்ளது.இந்நிலையில், சென்னையில் தங்கி படித்த, பிற மாவட்டங்களைச் சேர்ந்த, மாற்றுத்திறனாளி மாணவர்கள், தேர்வுக்காக, நேற்று சிறப்பு பஸ் வாயிலாக, சென்னை வந்தனர்.சென்னை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாணவர்கள், அவர்கள் தங்கி பயின்ற சிறப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு, பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட நல அலுவலர் கூறுகையில், 'மதுரை, கோவை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற, 118 மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு பஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்' என்றார்.இதற்கிடையில், நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால், தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சரியான திட்டமிடல் இல்லாமல், மாணவர்கள் அழைத்து வரப்பட்டுஉள்ளனர். ஏற்கனவே, சென்னையில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X