பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கிறது தவணை தொகை: வீடு வாங்கியோர் அதிர்ச்சி

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Housing Loan, lockdown, corona crisis, coronavirus, covid 19,
 தவணை தொகை, வீடு, அதிர்ச்சி

ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட தவணை ஒத்திவைப்பு சலுகை முடிந்ததும் வீட்டுக்கடன் தவணை தொகையை வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் உயர்த்துவதால் வீடு வாங்கியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஒத்திவைப்பு


ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் முடங்கின; ஊழியர்கள் முறையான மாத சம்பளம் பெற முடியாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே வங்கிகள் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களுக்கான தவணையை ஒத்தி வைக்கும் சலுகை அறிவிக்கப்பட்டது.

முதலில் மூன்று மாதங்களுக்கு அறிவிக்கப்பட்ட இச்சலுகை ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்படும் தவணையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 1 முதல் செலுத்த வேண்டிய தவணை தொகையை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் செப்டம்பரில் 500 முதல் 2000 ரூபாய் வரை தவணையில் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news



வழிகாட்டுதல்


ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் அடிப்படையில் தவணை ஒத்திவைப்பு காலத்துக்கு ஏற்ப தவணை காலத்தை நீட்டிப்பதே நல்லது. அதை விடுத்து சில நிதி நிறுவனங்கள் தவணை தொகையை உயர்த்துவது மக்களை பாதிக்கும். ஏற்கனவே சில மாதங்கள் முழு சம்பளம் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி உரிய வழிகாட்டுதல்களை நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
09-ஜூன்-202017:26:55 IST Report Abuse
SIVA G  india அப்போ ஒழுங்கா தவணை கட்டினவனும்ப்போ தொகை குறைக்கிறதுக்க ஒழுங்கா வரி கட்டினவனும், வங்கில பணம் போட்ட கிழடுகளும் மட்டுமே ஏமாளிகள்.அரசு சொத்துகளை கொள்ளையடிச்சவனுக்கு எதிரா வாயே திறக்க முடியாது.இனிமே கல்வி கட்டணத்திற்கும் தவணை முறை வங்கி கடன். எல்லா நிலைகளிலும் மருத்துவமும்,கல்வியும் கட்டணம் இலவசமா வேண்டும். அதற்கு இணையாக எல்ல இலவசங்களும் மானியமும் வேண்டாம் என என்னும் காலம் எப்போதோ.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-ஜூன்-202017:11:33 IST Report Abuse
S.Baliah Seer கார் லோன் வாங்கியிருந்தேன்.சென்ற மார்ச் மாதம் தவணை தொகை பிடிக்காமல் இருந்தார்கள். போன் மூலம் வங்கியில் பணம் உள்ளது பிடித்து கொள்ளுங்கள் என்றேன். பிடித்துக் கொண்டார்கள். பின் ஏப்ரல், மே மாதங்களுக்கு பிடிக்காமல் இருந்ததால் மீண்டும் போன் செய்து ஒவ்வொரு மாதமும் ரெகவரி செய்து கொள்ளுங்கள் என்றேன். ரெகவரி செய்யவில்லை. பின் கோட்டூர்புரம் ஐஓபி (கடன் வாங்கிய இடம்)வங்கி மேலாளரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து மாதா மாதம் கடன் தவணையை பிடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.ஒன்றும் நடக்காததால் மவுண்ட் ரோடு ஐஓபி தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து கடன் தொகையை ஏம்மா பிடிக்க மாற்றீங்க ,உங்க பணம் தேவை இல்லாமல் என்னுடைய சேவிங்ஸ்ல தூங்குது என்றேன்.பணம் பிடித்த பாடில்லை.இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும்.நாளை தவணை காலம் ,வட்டி அதிகரிக்கும் போது பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள் தானே.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-ஜூன்-202016:33:55 IST Report Abuse
மலரின் மகள் கடன் வாங்கவே கூடாது அது கல்விக்கு என்றாலும் கூட என்று எங்களது தந்தை கூறுவார்கள். அதை எப்போதும் வேதவாக்காக கொண்டிருக்கிறேன். கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் ஈழ வேந்தன் என்று உவமை உள்ளதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X