தமிழ்நாடு

வாங்க பழகலாம்! சமூக வலைதளங்களில் நூதன மோசடி

Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாங்க பழகலாம்! சமூக வலைதளங்களில் நூதன மோசடி

மதுரை: மதுரையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி, பண மோசடி அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளன.

மதுரை பைபாஸ் ரோட்டை சேர்ந்த ஒருவரிடம், அவரது நண்பர் மூலம் பேஸ்புக் மெசேஞ்சர் மூலம் நட்பை ஏற்படுத்தி பணஉதவி செய்யும் படி கேட்டு ரூ. 2 லட்சத்திற்கும் மேல் வசூலித்து ஒருவர் மோசடி செய்தார். வில்லாபுரம் விக்னேஷ் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான கல்லுாரி மாணவியை காதலிப்பது போல் நடித்து நகை, பணம் பெற்று மோசடி செய்தார்.

இதேபோல் 'டிக்டாக்' மூலம் அறிமுகமான பெண்ணிடம் எல்லீஸ்நகர் ராமச்சந்திரன் ரூ.97 ஆயிரம் ஏமாந்துள்ளார். திருப்பூர் சுசி என்ற பெண்ணுடன் 'டிக்டாக்'கில் பழகி பணத்தை இழந்த பிறகுதான் அது போலி கணக்கு எனத்தெரிந்தது.

போலீசார் கூறியதாவது: சமீபகாலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் மோசடி செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள் பெயரில் போலி ஐ.டி.,கள் ஏற்படுத்தி சபலம் உள்ள ஆண்களிடம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 15 நாட்களில் 4 வழக்குகள் பதிவு செய்துள்ளோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூன்-202019:20:32 IST Report Abuse
ஆப்பு யாரா இருந்தாலும் வேலை நடக்காமல் காசு குடுக்காதீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X