கொரோனா பயண கட்டுப்பாடுகள்: எச்சரிக்கும் கூகுள்

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Google Maps, Travel Restrictions, CoronaVirus, COVID-19, lockdown

வாஷிங்டன்: கொரோனா விழிப்புணர்வின் ஒரு பகுதியாக கூட்ட நெரிசலான பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகளை கூகுள் மேப், புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் சிக்கித் தவித்து வரும் சூழலில், பல நாடுகள் பொது முடக்கத்தில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த தளர்வுகளால் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று எளிதில் பெருமளவு மக்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டமுள்ள பகுதிகளில் மக்கள் பயணத்தை தவிர்ப்பது மூலம், கொரோனா பரவலில் இருந்து தற்கொள்ள முடியும். இதனை கருத்தில் கொண்டு கொரோனா குறித்து பயணக் கட்டுப்பாடுகள் குறித்து பயனர்களை எச்சரிக்க, அவர்களின் பயணங்களை சிறப்பாக திட்டமிட கூகுள் மேப் உதவுகிறது என ஆல்பாபெட் கம்பெனி தெரிவித்துள்ளது.


latest tamil news


கடந்த சில மாதங்களில், சுமார் 131 நாடுகளில் உள்ள பில்லியன் கணக்கான கூகுள் பயனர்களின் இருப்பிட தரவை ஆல்பாபெட் நிறுவனம் பகுப்பாய்வு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ரயில் நிலையம் எவ்வளவு நெரிசலாக இருக்கக்கூடும் அல்லது ஒரு குறிப்பிட்ட பாதையில் பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையில் இயங்குகிறதா என்பதை சரிபார்க்க கூகுள் மேப் அனுமதிக்கிறது. இதன் மூலம் பயனர்கள், கூட்ட நெரிசல் மிகுந்த அல்லது பயண கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை அறிவது மட்டுமல்லாமல் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு கொரோனா பரவலில் இருந்தும் எச்சரிக்கையுடன் இருக்க உதவுகிறது.


latest tamil news


இந்த சேவை தற்போது அர்ஜென்டினா, பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் எச்சரிக்கைகள் வெளியிடப்படும் எனவும், கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் கொரோனா சோதனைச் சாவடிகள் மற்றும் தேசிய எல்லைகளை கடப்பதற்கான கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்களும் அடங்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூன்-202008:42:50 IST Report Abuse
ஆப்பு கூகுள் மக்களை அடிமைப் படுத்தி வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X