பொது செய்தி

தமிழ்நாடு

வேடந்தாங்கல் சரணாலய விவகாரம்: வனத் துறைக்கு மத்திய அரசு உத்தரவு

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Vedanthangal Bird Sanctuary, bird sanctuary, tamil nadu news, dinamalar news, வேடந்தாங்கல், சரணாலயம், வனத் துறை, மத்திய அரசு, உத்தரவு

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய சுற்றளவை குறைக்கும் திட்டத்தை, தமிழக வனத் துறை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக வனத் துறை விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டிய, 5 கி.மீ., சுற்றளவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இதை, 3 கிலோ மீட்டராக குறைக்க, தமிழக வனத் துறை, மத்திய வன உயிரின வாரிய ஒப்புதலை கோரியுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்துக்காக, வனத் துறை இந்த நடவடிக்கையை எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.


latest tamil news



இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: வேடந்தாங்கல் சரணாலய வெளிச்சுற்று பகுதியை ஒட்டி, ஒரு தனியார் மருந்து நிறுவன நிலம் உள்ளது. இங்கு, புதிய ஆலை அமைக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது.ஆனால், மருந்து நிறுவன நிலம், வேடந்தாங்கல் சரணாலய பிரதான பகுதியில் இருந்து, 3.72 கி.மீ., சுற்றளவுக்குள் வருகிறது. எனவே, அந்நிறுவன திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பது சிக்கலாகியுள்ளது.

இந்நிலையில், சரணாலய வெளிச்சுற்று பகுதியை, 3 கிலோ மீட்டராக குறைக்க, தமிழக வனத் துறை, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. அதே நேரம், தனியார் நிறுவனமும், தங்கள் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. தனியார் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக முயன்று வரும் நிலையில், அதற்கு உதவும் வகையில், வனத் துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனால், வனத் துறை நடவடிக்கையின் பின்னணி குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.இதில் சம்பந்தப்பட்ட வனச் சரகர், வன உயிரின காப்பாளர் உள்ளிட்டோர் மீது, விசாரணை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


மத்திய அரசு உத்தரவு


வேடந்தாங்கல் சரணாலய சுற்றளவு குறைப்புக்கு, தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த கோரிக்கைக்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில், தமிழக வனத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.'இயற்கைக்கு எதிராகச் செயல்படுவது, தற்போதைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் சுலபமாகி விட்டது. காலம் காலமாக, பறவைகளின் சரணாலயமாக விளங்கும் வேடந்தாங்கலில், இப்படி ஒரு முரண்பாடான விவகாரம் நடப்பதை அனுமதிக்கவே முடியாது.'ஒரு தனியார் நிறுவனத்துக்காக, இப்படி அரசு வளைந்து கொடுப்பதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு தண்டனை வழங்கி, இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும்' என, முதல்வரிடம் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்
-- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
10-ஜூன்-202005:50:25 IST Report Abuse
RajanRajan ஏன் குரானா சென்னையில் மட்டும் தீவிரமெடுக்கிறதாம். இப்படி பட்ட கூத்தாடிகள் உலாத்துறதுனாலே தான். இதுக்கு என்ன மருந்தா கண்டு புடிக்க முடியும். இயற்கையை சீண்டி பார்த்தே வளர்ந்துட்டானுங்க.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-202014:42:51 IST Report Abuse
Sankar Ramu இதனாலதிமுக க்கு கட்டிங் உண்டா? ஏதும் எதிர்பு இல்லையே?
Rate this:
Cancel
09-ஜூன்-202014:18:47 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா சென்னைக்கு உள்ளேயே இருக்கும் பள்ளிக்கரணை என்ன ஆயிற்று? அதையும் சுவாகா செய்து கொண்டு தானே இருக்கிறார்கள் பொது மக்களும், தனியார் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X