பொது செய்தி

தமிழ்நாடு

10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.டிவி மூலம் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: 2019-20 ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11ம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன (வேதியியல், கண0க்கு பதிவிய0ல், புவியியல்(புதிய பாடத்திட்டம்), வேதியியல், கணக்கு பதிவியல்,
பத்தாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பொதுத்தேர்வு, ரத்து, ஆல்பாஸ்,  மாணவர்கள், கொரோனா, கொரோனாவைரஸ், மதிப்பெண், Tamil Nadu, tn govt, cancels, class 10th, public exams, examination

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டிவி மூலம் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: 2019-20 ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11ம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன (வேதியியல், கண0க்கு பதிவிய0ல், புவியியல்(புதிய பாடத்திட்டம்), வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் புவியியல்( புதிய பாடத்திட்டம்)) ஆகிய பாடங்களுக்கா தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை நடத்த ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்து, அதற்கான நடவடிக்கைகள் அரசு எடுத்து வந்தது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட், இந்த தேர்வுகளை, தற்போது, கொரோனா தொற்று அதிகமுள்ள நிலையில் தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டு கொண்டுள்ளது.

இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது. தற்போது உள்ள நிலையில், கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.குறுகிய காலத்தில் நோய் தொற்று, குறைய வாய்ப்பு இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் 15ம் தேதி துவங்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
latest tamil newsஎனவே இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும். 12ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப 12ம் வகுப்பு மறு தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


புதுச்சேரியிலும் 10 ம் வகுப்பு தேர்வு ரத்து


நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் இன்று ( 9ம் தேதி) தமிழக முதல்வர் இபிஎஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதுபோல் புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
09-ஜூன்-202020:55:55 IST Report Abuse
RajanRajan அண்ணா ரொம்பவே நிலை கலைஞ்சுட்டாரு.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-ஜூன்-202020:51:18 IST Report Abuse
Natarajan Ramanathan ஆகஸ்ட் மாதம்வரை கொரானா இருந்தால் நீட் தேர்விலும் அனைவரும் பாஸ்தானா?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-ஜூன்-202020:32:09 IST Report Abuse
Natarajan Ramanathan புதுச்சேரியில் ஏன் ரத்து செய்ய வேண்டும்? அங்கே கொரானா பாதிப்பு மிகவும்குறைவு மேலும் அங்கு மொத்தமே ஆயிரம் பேராவது தேர்வு எழுதுவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X