சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர் காதை கடித்து தாக்கியவர் கைது

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ப.வேலுார்: வேலகவுண்டம்பட்டி அடுத்த, குமராண்டிபாளையத்தை சேர்ந்தவர் ரவி, 34; லாரி டிரைவர். இவர் தன் வீட்டிற்கு அருகில் வசித்த கட்டட தொழிலாளி ஜெகநாதன், 31, என்பவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன், ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார்.
கடனை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. கடந்த, 6 இரவு, இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெகநாதன், ரவியின் இடது காதை கடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ரவி, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X