பொது செய்தி

தமிழ்நாடு

ஜார்கண்ட் மாநில தொழிலாளர் 400 பேர் சிறப்பு ரயிலில் பயணம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ஈரோடு: ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள், 400 பேர், ஈரோட்டில் இருந்து, சிறப்பு ரயிலில், சொந்த ஊருக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு ஆலைகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில ஆண், பெண் தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். கொரோனா ஊரடங்கால், சொந்த ஊர் செல்ல விரும்புவோரிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது.
விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்காதவர்கள் என இதுவரை, 19 ஆயிரத்து, 200 பேர் சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில், சிறப்பு பஸ், வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, 400 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள், சிறப்பு ரயிலில், ஈரோட்டில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக இவர்களுக்கு, அடையாள அட்டை, அனுமதி கடிதம், உடல் பரிசோதனை சான்று வழங்கப்பட்டது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், மதிய உணவு வழங்கினர். ரயில் ஏறும் முன், இரவு உணவு, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X