பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஈரோட்டில் இருந்து கிளம்பிய 11 மாற்றுத்திறனாளி மாணவர்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, பல்வேறு பகுதியில் படிக்கும், ஈரோட்டை சேர்ந்த, 11 மாற்றுத்திறனாளி மாணவர்கள், நேற்று புறப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கால், பல்வேறு பகுதி களில் படித்த, பத்தாம் வகுப்பு மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். வரும், 15 முதல், 25 வரை பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. தாங்கள் படித்த பள்ளியிலேயே மாணவர்கள் தேர்வு எழுத மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சொந்த சொந்த ஊர் திரும்பிய மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி அமைந்துள்ள ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களால், அவ்வாறு செல்ல இயலாது என்பதால், அரசு சார்பில் அரசு விரைவு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் படிக்கும் பள்ளி உள்ள இடத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதன்படி தமிழகத்தில், 10 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் நேற்று இயக்கப்பட்டன. இதில் ஈரோட்டில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம், பூந்த மல்லி கண் பார்வை இழந்த மாணவர்களுக்கான பள்ளிக்கு நான்கு பேர், சென்னைக்கு நான்கு பேர், தர்மபுரி, தஞ்சை, திருச்சிக்கு தலா ஒருவர் என, 11 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சொந்த காரில் செல்ல உள்ளதால், ஒரு மாணவர் மட்டும் செல்ல வில்லை. அதேபோல் ஈரோடு மாவட்ட பள்ளிகளில் படித்துவிட்டு, சொந்த ஊர் சென்ற, மாற்றுத்திறனாளி மாணவர்கள் நான்கு பேர், ஈரோடு திரும்பினர்.
தேர்வு எழுதி முடித்த பின், சொந்த ஊர்களுக்கு சிறப்பு பஸ்களில் அனுப்பி வைக்கப்படுவர். இத்தகவலை, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X