தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு| Dinamalar

தமிழ்நாடு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

Added : ஜூன் 09, 2020
Share

கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. இரண்டாம் போகம் பாசனத்துக்கு, கடந்த, பிப்.,1ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் இரு பாசனங்களிலும், விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
கடைமடை பகுதிக்கு சில இடங்களில், தாமதமாக தண்ணீர் சென்றதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும், தண்ணீர் திறக்கும் நாளை நீட்டிக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜூன், 6ம் தேதி முதல், 15ம் தேதி வரை, பத்து நாட்களில், ஏழு நாட்கள் திறந்தும், மூன்று நாட்கள் நிறுத்தியும், நீர் நிர்வாகம் செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
இதன்படி, ௫ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, மூன்று நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
நேற்று காலை, 8:30 மணிக்கு, தலைமதகில் இருந்து, தடப்பள்ளி வாய்க்காலில், 300 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 100 கன அடி திறக்கப்பட்டது. வரும், 15ம் தேதி வரை, நீர் நிர்வாகம் செய்யப்படும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X