தமிழ்நாடு

கல் குவாரி வெடியால் வீடுகளில் விரிசல் - சென்னம்பட்டி மக்கள் குமுறல்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ஈரோடு: கரட்டில் இயங்கும் கல் குவாரிகளால், வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பதாக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் புகார் தெரிவித்தனர்.
அந்தியூர் அருகே சென்னம்பட்டி மஞ்சுக்கல் பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
அந்தியூர், கிட்டம்பட்டி, ஆதிதிராவிடர் காலனி பகுதியில், 150 வீடுகளில், 600க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காலனிக்கு அருகே மஞ்சுக்கல்கரட்டில் கல் குவாரிகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இங்கிருந்து கனிமங்களை வெட்டி எடுத்து, எம்-சான்ட், பி.சான்ட், ஜல்லி கற்களாக்கி விற்கின்றனர்.
பெரிய பாறைகளை அதிக சக்தி வாய்ந்த வெடிகளை வைத்து வெடிக்க செய்கின்றனர். இரவு, பகல் பாராமல் வெடிப்பதால், குழந்தைகள், முதியவர்கள் துாங்க முடியவில்லை. அதிக அதிர்வு, சத்தத்தால், வீடுகளில் விரிசல் விழுகிறது.
குவாரிக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால், விபத்து அபாயம் உள்ளதுடன், புழுதி காற்றில் பரவி சுற்றுச்சூழல் பாதிக்கிறது. எம்-சான்ட், பி.சான்ட் உற்பத்தியின்போதும் துாசி, மண் பறந்து வீடுகளில் படிகிறது.
கண்கள், மூக்கில் படுவதால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தோல் நோய் உட்பட பல நோய் ஏற்படுகிறது. முறையான வழிகளை வகுத்து, அதன்படி செயல்படுத்த, குவாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதுவரை குவாரிகளின் செயல்பாட்டை, நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X