பொது செய்தி

தமிழ்நாடு

ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு டெக்ஸ்டைல் பிராசசிங் ஆலையை மூட உத்தரவு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு, சூரியம்பாளையத்தில் ராஜலட்சுமி டெக்ஸ்டைல் பிராசசர்ஸ் பி.லிமிடெட் தொழிற்சாலையில், கலெக்டர் கதிரவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 14 வகையான நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகை நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தவிர, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்காமல், ஆலை கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது குறித்த புகாரில், வைராபாளையம் பகுதியில், கடந்த வாரம் ஆய்வு நடந்தது. இதில் ஒரு சலவை ஆலை, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது, ஈரோடு, சூரியம்பாளையம் ராஜலட்சுமி டெக்ஸ்டைல் பிராசசர்ஸ் பி.லிமிடெட் என்ற, சாய தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய தொட்டிகள், ஓடை புறம்போக்கு நிலத்தில், ஆக்கிரமித்து கட்டியிருப்பது தெரியவந்தது.
மின் இணைப்பை துண்டித்து, ஆலையை மூடவும் உத்தரவிடப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X