பொது செய்தி

தமிழ்நாடு

22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன் கொடுத்து கொரோனா நோயாளி மீட்பு: மதுரை டாக்டர்கள் அசத்தல்

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஆக்ஸிஜன், கொரோனா நோயாளி, மதுரை டாக்டர்கள், அசத்தல்

மதுரை : மதுரையில் அதிதீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன், ரூ.3 லட்சம் பிரத்தியேக மருந்து கொடுத்து 30 நாட்கள் போராடி டாக்டர் குழுவினர் மீட்டு அசத்தியுள்ளனர்.

நாட்டில் அறிகுறியில்லாத, மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகள் 10 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். தீவிர பாதிப்புள்ளோர் 15 நாட்கள் வரை கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த 54 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மே 9ல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே நுரையீரல், சர்க்கரை நோய்கள், குண்டுத் தன்மை போன்ற பாதிப்புகள் இருந்ததால், தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐ.சி.யூ.,வில் சிகிச்சை துவங்கியது.


மிகவும் சவாலான நோயாளி


அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருந்தது. மூச்சுத்திணறல் பாதிப்பு கடுமையானது. இதுவரை டாக்டர்கள் சந்தித்த வேறு எந்த நோயாளிகளும் இவரளவு பாதிப்பிற்குள்ளாகவில்லை. செயற்கையாக அதிவேக ஆக்ஸிஜன் வழங்க டாக்டர்கள் முடிவு செய்தனர். நிமிடத்திற்கு 60 முதல் 70 லிட்டர் வரை வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விலையுயர்ந்த பிரத்தியேக மருந்தை டாக்டர்கள் பயன்படுத்தினர். ஊசி மூலம் அம்மருந்தை நோயாளியின் உடலில் சில நாட்கள் செலுத்தினர்.

உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் செயற்கை ஆக்ஸிஜன் இன்றி நன்றாக சுவாசிக்க துவங்கினார். எனினும் பூரண குணமடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. மதுரை கொரோனா வார்டில் அதிக நாட்கள் சிகிச்சையில் இருந்தவர் இவர் தான். தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிகிச்சையளித்த நுரையீரல் துறை தலைவர் பிரபாகரன், பொது மருத்துவத் துறை தலைவர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவை டீன் சங்குமணி பாராட்டினார்.


latest tamil news

22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன்


டீன் சங்குமணி மேலும் கூறுகையில், 'நாங்கள் சந்தித்த கொரோனா நோயாளிகளிலேயே இவர் மிகவும் சவாலாக இருந்தார். 30 நாட்கள் போராடி குணமாக்கியுள்ளோம். இதை டாக்டர்கள் குழுவின் சாதனை என்றே கூறுவேன். மொத்தம் 22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கியுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்திக்காக அவரது உடலில் ஏற்றப்பட்ட மருந்தின் பெயர் 'டொசுலிசுமேப்'; விலை ரூ.3 லட்சம். தனியார் மருத்துவமனையில் இச்சிகிச்சையளிக்கப்பட்டிருந்தால் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது' என்றார்.


10 மடங்கு கூடுதல்


மருத்துவமனை ஆக்ஸிஜன் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், 'மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜனை திரவநிலையில் வாங்கி, வாயு நிலைக்கு மாற்றி நோயாளிகளுக்கு சப்ளை செய்கிறோம். பொதுவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால் நிமிடத்திற்கு 5 முதல் 6 லிட்டர் (வாயு நிலையில்) வரை ஆக்ஸிஜன் வழங்குவோம். ஆனால் இவருக்கு பாதிப்பு தீவிரமாக இருந்ததால் 10 மடங்கு கூடுதலாக வழங்கினோம்' என்றனர்

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
10-ஜூன்-202013:23:34 IST Report Abuse
தமிழ்வேள் நல்ல சிகிச்சை..மற்றவர்களுக்கு?????
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
10-ஜூன்-202004:39:32 IST Report Abuse
B.s. Pillai It is heart warming to know that there are sincere and broad minded Doctors in Government hospitals . In this time and world of amassing wealth , money minded people who only look at monetary benefits from a patient, this news spreads as a warm message that not all , but some ,are mercy and good hearts. Really a lot can be said to Dr.Prabakaran and Dr. Natarajan and their teams but my mind is blocked by excessive feelings. Hats off to these Doctors and their teams. God may bless them with long life with good health to continue their selfless service to humanity.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
10-ஜூன்-202003:47:18 IST Report Abuse
NicoleThomson இது போன்ற உதவியை சாமானியனுக்கு சென்று சேர உதவுங்கள் மருத்துவர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X