பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் தினம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, லட்சுமணம்பட்டியில் மரக்கன்று வழங்கல் மற்றும் இயற்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டத்தில் செயல்படும், சைக்கோ அறக்கட்டளை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இயற்கை வளங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துல், மறு பயன்பாடு, மறு சுழற்சி, மழை நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கிராம விளையாட்டுகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. அனைத்து தரப்பினருக்கு மா, பலா, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், வேளாண்மை பிரதிநிதிகள், விவசாயிகள், மகளிர், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X