ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி

Added : ஜூன் 09, 2020
Share
ஓசூர்: ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.ஓசூர், வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புனுகன்தொட்டி அடுத்த பெத்தகொள்ளு கிராமத்தில், துார்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ள ஏரிக்கரையில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

ஓசூர்: ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.
ஓசூர், வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புனுகன்தொட்டி அடுத்த பெத்தகொள்ளு கிராமத்தில், துார்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ள ஏரிக்கரையில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, வேம்பு, இலுப்பை, பூவரசு, மருது, புங்கன், அத்தி, ஆலம் போன்ற பல்வேறு வகையான மரங்களை நட்டனர். மேலும், மரக்கன்றுகளை கால்நடைகள் சேதம் செய்து விடாமல் தடுக்க, வேலிகள் அமைக்கப்பட்டன. மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஓசூர், வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் இம்தியாஸ்கான், கெலவரப்பள்ளி பஞ்., தலைவர் புட்டாரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X