தமிழ்நாடு

ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் - மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ஓசூர்: கொரோனா ஊரடங்கு காலத்தில், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், ஓசூர் பகுதியில், வெளி மாநில தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அவர்களை, மாவட்டம் நிர்வாகம் சொந்த ஊருக்கு அனுப்பி வருகிறது. ஓசூரிலிருந்து இதுவரை இயக்கிய, எட்டு சிறப்பு ரயில்களில், 11 ஆயிரத்து, 336 தொழிலாளர்கள், சொந்த மாநிலம் சென்றுள்ளனர். ஆனால், மாவட்டத்தில் இன்னும் பெரும்பாலான தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக, பசுமை குடில்கள், கோழிப்பண்ணைகள், செங்கல்சூளைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊதியம் கிடைக்காமல் பசியிலும், ஊருக்கு செல்ல வழி தெரியாமலும் தவிக்கின்றனர். ஓசூர், சுற்று வட்டார பகுதிகளில்தான், அதிகளவு வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். ஓசூர் தாலுகாவில் மொத்தம் எவ்வளவு வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர் என்ற விபரம், போலீசார், வருவாய்த்துறையிடம் இதுவரை இல்லை.
அதனால், மாவட்ட நிர்வாகம் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறது என்ற தகவல் கூட, தொழிலாளர்களுக்கு தெரியவில்லை. குறிப்பாக, ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உள்ள பசுமை குடில்களில் பணியாற்றும் உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள், ஊதியம் கிடைக்காததால், ஊருக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் வெளிமாநில தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பும் முன், வி.ஏ.ஓ.,க்கள் மூலம் தங்களது பகுதிகளில் எவ்வளவு வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர் என்ற விபரத்தை பெற்று, அவர்களது நிலையை புரிந்து, உணவு பொருட்கள் அல்லது அவர்கள் ஊருக்கு செல்ல விரும்பினால், அனுப்பி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X