தமிழ்நாடு

இரு தவணைகளில் மின் கட்டணம்: கன்ஸ்யூமர் வாய்ஸ் கோரிக்கை மனு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சேலம்: கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேசன் சார்பில், நிறுவன தலைவர் பூபதி உள்ளிட்டோர், சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தில், மின் கட்டண அளவீடு எடுக்காததால், ஜனவரி-பிப்ரவரி மாத கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பின், தற்போது மதிப்பீடு செய்துள்ள கட்டணத்தால், மின் நுகர்வோர் பொருளாதார ரீதியில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பொதுவாக பிப்., மார்ச் மாதங்களில் மின் உபயோகத்தை விட, ஏப்ரல், மே மாத மின் உபயோகம் அதிகம்.
ஊரடங்கு காலத்தில், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே இருந்ததால், பயன்பாடு அதிகரித்தது. இதனால் அதிக மின் தொகை வந்ததால், நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், கால அவகாசமோ அல்லது இரு தவணைகளில் கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X