பொது செய்தி

தமிழ்நாடு

தீவிர தீக்காய சிகிச்சை பிரிவு கட்டடம் சேலம் அரசு மருத்துவமனையில் திறப்பு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், ரூ.2.17 கோடி மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட 'தீவிர தீக்காய சிகிச்சை பிரிவு' கட்டடத்தை, முதல்வர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம், நேற்று திறந்து வைத்தார்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடத்துக்கு பின்புறம், 9,498 சதுரடி நிலம் சர்வே செய்து, தரை தளத்தில், 4,706 சதுரடியில் வரவேற்பு அறை, வெளி நோயாளிகள் பிரிவு, கட்டுப்போடும் அறைகள் இரண்டு, செவிலியர் அறை, தீக்காயம் சுத்தப்படுத்தும் அறை, புனர்வாழ்வு அறை, குளிர் பதன கட்டுப்பாடு அறை, கிடங்கு, கழிப்பறை ஆகியன இடம்பெற்றுள்ளன.
முதல் தளம் அமைந்துள்ள, 4,792 சதுரடியில் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அறை, சிறிய அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சை மருத்துவர் அறை, செவிலியர் அறைகள், தலா நான்கு படுக்கைகள் கொண்ட ஆண், பெண் வார்டு, உணவு வழங்குமிடம், குளியல் அறை, கழிவறை, குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. தரை மற்றும் இரு தளத்துடன், தீவிர தீக்காய சிகிச்சை கட்டடம் வடிவமைத்து, தற்போது, தரை, முதல் தளம் மட்டும் கட்டப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப, இரண்டாம் தளம் கட்டப்பட உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X