பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்ப ஏற்பாடு

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சித்தூர் : திருப்பதியில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி, கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையொட்டி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, சோதனை முறையில் 2 நாட்கள் தேவஸ்தான பணியாளர்களும், நாளை உள்ளூர் பக்தர்களும் அனுமதிக்கப்படுவர்.


latest tamil news



தொடர்ந்து, ஜூன் 11 முதல் ஆன்லைன் மூலமாக தரிசனத்துக்கு முன்பதிவு செய்த 3 ஆயிரம் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான கவுண்டர்கள் மூலமாக முன்பதிவு செய்த 3 ஆயிரம் பக்தர்கள் என மொத்தமாக 6 ஆயிரம் பேர் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில், சுவாமி தரிசனத்திற்கு 1 மணி நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சோதனை முறையில் அனுப்பப்பட்டதன் மூலம் நேற்று 2 மணி நேரத்தில் 1200 பக்தர்கள் வரை சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202004:36:59 IST Report Abuse
தல புராணம் ஜருகண்டி ஜருகண்டி தொந்தரவு இல்லாமல் தரிசனம் செய்ய முடியும் போல .. ஒரு நாள்லே தரிசனத்துக்கு 12 மணிநேரம் நடை திறந்து இருக்குன்னா 15,000 பேருக்கு ஆளுக்கு 2.88 செகண்டு வருது.. உள்ளே கோவிந்தனை பாக்குற இடத்திலே கியூவில் 20 பேரு உங்க முன்னாடி இருந்தா நேரா போகும் போது ஒரு 56 செகண்டு, ரிவர்ஸுக்கா வெளியே போகும் போது ஒரு 40 செகண்டு.. மொத்தம் நூறு செகண்டு தரிசனம்.. அதுவும் ஜருகண்டி இல்லாமல்.. பக்தர்களுக்கு வாழ்வு தான். கொரோனா வந்தா நேரா வைகுந்தம் தான்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202004:30:55 IST Report Abuse
தல புராணம் கோவிந்தா.. கோ..விந்தா
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
09-ஜூன்-202022:23:17 IST Report Abuse
sundarsvpr நாயன்மார்கள் ஆழ்வார்கள் மற்றும் பொதுமக்கள் கால்நடையாக சென்று வழிபட்டார்கள். அப்போது திருக்கோயில்களில் பணிபுரிவர்களுக்கும் வணங்க வரும் தேசாந்திரிகளுக்கு பிரசாதம் வழங்க மன்னர்கள் செல்வந்தர்கள் நன்கொடை வழங்கினர். பணிகள் செவ்வனே நடைபெற்றுவந்தன. அப்போது கோயில் மீது ஈடுபாடு பக்தர்களுக்கு. இப்போது சொத்து மீது ஈடுபாடு அரசுக்கு.. ஆசிரியர் வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா என்ற வரலாற்று நாவலை படித்தால் தெரியும் கோயில் வியாபார ஸ்தலம் அல்ல. உண்டியலில் காணிக்கை செலுத்துவது பக்தியல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X