அசாமில் உள்ள ஆயில் இந்தியா நிறுவன எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
assam, oil well, fire, Baghjan oil well, Tinsukia district, Oil India Limited, oil, Dibru-Saikhowa National Park, Assam Chief Minister Sarbananda Sonowal, teams of police, paramilitary, NDRF   அசாம், எண்ணெய் கிணறு, தீவிபத்து,

கவுகாத்தி: அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 500 கி.மீ., தொலைவில் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பாக்ஜானில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரி வாயு உற்பத்தி செய்யும் எண்ணெய் கிணறு உள்ளது. இதில் கடந்த இரு வாரங்களாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 9) பிற்பகல் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது.

இதையடுத்து மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தீயினை கட்டுப்படுத்த விமானப்படை மற்றும் ராணுவத்தின் உதவியை அசாம் அரசு நாடியுள்ளது. தீயை கட்டுப்படுத்த சிறப்பு நிபுணர்கள் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர்.


latest tamil newsமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் 1.5 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் சுமார் 6000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202004:38:21 IST Report Abuse
தல புராணம் எல்லாம் நேரு செஞ்ச தப்பு..
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
10-ஜூன்-202003:48:47 IST Report Abuse
NicoleThomson ஐயோ நல்ல மழைவரவேண்டிய இந்த நேரத்தில் புகை மேகமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X