வரும் தேர்தலில் மம்தாவை மக்கள் அரசியல் அகதியாக்குவர் : அமித்ஷா

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: சிறுபான்மையினரை சமாதனப்படுத்தும் வகையில் சி.ஏ.ஏவை எதிர்க்கும் முதல்வர் மம்தாவை மாநில மக்கள் வரும் தேர்தலில் அரசியல் அகதியாக்குவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.latest tamil newsமே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அமைச்சர் பேசியதாவது: இன வன்முறை நடந்து வரும் ஒரே மாநிலம் மே.வங்கம் தான். சட்ட விரோத ஆயுதங்களை தயாரிப்பதே மே. வங்கத்தில் வளர்ந்து வரும் ஒரே தொழில். அரசியல் போரை நடத்த பா.ஜ., இங்கு வரவில்லை. வங்கத்தின் கலாசாரத்தை வலுப்படுத்தவே பா.ஜ., இம் மாநிலத்தில் உள்ளது.

கம்யூனிஸ்ட்கட்சிகளுக்கு 34 ஆண்டுகள் வாய்ப்புகொடுத்தீர்கள். மம்தாதீதிக்கு 10 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஒரு காலத்தில் பீகார் பின்தங்கிய மாநிலமாக இருந்தது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு பின்னர் வளர்ச்சி பாதையில் உள்ளது.உ.பி.,மாநிலம் வெறும் மூன்றே ஆண்டுகளில் முன்னேறி உள்ளது.


latest tamil newsஅரசியல் வன்முறை காலாச்சாரம் செழித்து வரும் ஒரே மாநிலம் மே. வங்கம். சிறுபான்மை மக்களை சமாதானப்படுத்தும் வகையில் சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து வருகிறார். இதற்காக மக்கள் மம்தாவை ஒரு அரசியல் அகதியாக்குவர். மம்தா பானர்ஜி 'ஷ்ராமிக் ஸ்பெஷல்' ரயில்களில் மாநிலத்திற்கு திரும்பி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 'அவமதித்துள்ளார்'. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் அந்த ரயில்களை 'கொரோனா எக்ஸ்பிரஸ்' என்று அழைத்தார்.

தொடர்ந்து மம்தாவை பற்றி குறிப்பிட்ட அமித்ஷா நீங்கள் குடியேறியவர்களை அவமதித்தீர்கள், அவர்களின் காயங்களுக்கு உப்பு தேய்த்தீர்கள். இந்த அவமானத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்.'கொரோனா எக்ஸ்பிரஸ்' உங்களை ஆட்சியில் இருந்து வெளியேற்ற அழைத்துச் செல்லும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் மே.வங்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசு திட்டங்களிலிருந்து மாநிலம் பயனடைவதை மம்தா பானர்ஜி விரும்பவில்லை
இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
09-ஜூன்-202021:56:13 IST Report Abuse
sundarsvpr எதிர்ப்பு என்ற விதண்டா கொள்கையை உடைய வங்காள ஆளும் கட்சிக்கும் தமிழகத்தின் எதிரி கட்சிக்கும் இனிமேல் வருங்காலத்தில் அரசியலில் வனவாசம் தான்.
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202021:34:58 IST Report Abuse
krishna Appadiye appstamana unmsi Moorga msttrum Bangladesh vandheri moorga kootathin vottu pichaikkaga Mammu begum Indhiavai mudhugil kuthugiral.CAA edhirthu veri pidithu porradiya ore mudhalvar indha desa virodhi begum.Eenenil Bangladesh vandheri moorga kootathin vottu pichaikkaga. indha mursi nichayam BJP Aatchikku varum.Ingulla 40 latcham vandherigalai Bangladesh thursthi WB Munnera vendum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X