இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா? ராஜ்நாத்திற்கு ராகுல் கேள்வி!

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி : ''லடாக்கில், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா, இல்லையா என்பதை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவு படுத்த வேண்டும்,'' என, காங்கிரஸ், எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீரின் லடாக் அருகே, இந்திய - சீன எல்லை பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் நிலவுகிறது. எல்லையில், இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டதால் பதற்றம்
Rahul Gandhi, Rajnath singh, Defence Minister rajnath singh, indo china border, border dispute,இந்திய பகுதி,சீனா ஆக்கிரமித்துள்ளதா? ராஜ்நாத்,ராகுல் கேள்வி!

புதுடில்லி : ''லடாக்கில், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா, இல்லையா என்பதை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவு படுத்த வேண்டும்,'' என, காங்கிரஸ், எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீரின் லடாக் அருகே, இந்திய - சீன எல்லை பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் நிலவுகிறது. எல்லையில், இரு நாட்டு வீரர்களும்
குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.


காரசார மோதல்இது குறித்து, காங்., - எம்.பி., ராகுலுக்கும், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கும், சமூக வலைதளத்தில், காரசாரமான மோதல் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், 'கையில் வலி ஏற்பட்டால், மருந்து சாப்பிடலாம். 'ஆனால், கையே வலியாக இருக்கும்போது எதுவும் செய்ய முடியாது' என, காங்கிரசின் தேர்தல் சின்னமான கையை குறிப்பிட்டு, கிண்டல் அடித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ், எம்.பி., ராகுல், சமூக வலைதளத்தில் நேற்று கூறியதாவது:கைச்சின்னத்தை கிண்டலடித்து ராஜ்நாத் சிங் கூறிய கருத்து, முடிவுக்கு வந்து விட்டது; இனி, அதைப் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், லடாக்கில், இந்தியப் பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதா, இல்லையா என்ற கேள்விக்கு மட்டும் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.


எதிர்க்கட்சிகள் கண்டனம்எல்லை பிரச்னை தொடர்பாக, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது:இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்திருந்தால், அது கண்டனத்துக்குரியது; அதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம்.அதேநேரத்தில், நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில், எல்லா கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து, ஒரே கொள்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியதாவது:தற்போது கொரோனா வைரசால், நாட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.இதுபோன்ற நேரத்தில், எல்லை பிரச்னையை மையமாக வைத்து, பா.ஜ.,வும், காங்கிரசும், மிக மோசமாக அரசியல் செய்வது, கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
10-ஜூன்-202019:34:52 IST Report Abuse
Parthasarathy Ravindran கொள்ளு தாத்தாவிடம் கேட்க வேண்டிய கேள்வி. அல்லது படித்து தெரிந்துகொள்ள வேண்டும். சீன மற்றும் பாக்கிஸ்தான் தொந்தரவுகளுக்கு கரணம் இவர்கள் குடும்பம் தான்.
Rate this:
Cancel
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
10-ஜூன்-202019:27:14 IST Report Abuse
maruthu pandi ஒரு வாரம் ராணுவ பயிற்சி எடுத்துட்டு ஒரு கவுரவ போர் வீரராக துப்பாக்கி எடுத்துட்டு நீங்களே ஒரு ரவுண்டு பார்த்துட்டு வாங்க பாஸ் . நீங்க போறத பாக்க நாங்க ஆவலா இருக்கோம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-ஜூன்-202017:17:38 IST Report Abuse
duruvasar அப்படியே தோழமை கட்சி திமுக விடம் முரசொலி கட்டிடத்திற்கு மூல பத்திரம் இருக்கானு கைட்டு சொல்லுங்க . . . ப்ளீஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X