பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
maharastra, covid-19, coronavirus, Mumbai, death toll, corona, coronavirus outbreak, covid-19 pandemic, corona, covid-19, mumbai, bmc, corona in Maharashtra, corona death, health, corona in mumbai, கொரோனா, மஹாராஷ்டிரா, மும்பை

மும்பை: மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்துள்ளது; மும்பையில் மட்டும் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 9) மட்டும் 2,259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது. அங்கு இதுவரை 90,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இன்று மட்டும் 120 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,289 ஆக அதிகரித்தது. கொரோனாவிலிருந்து இன்று 1,664 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,639 ஆனது. 47,979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் புதிதாக 1,015 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 51,100 ஆக உயர்ந்தது. இதுவரை அங்கு 1,702 பேர் பலியாகி உள்ளனர். 22,943 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், 26,455 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202004:24:54 IST Report Abuse
J.V. Iyer மகா முதல்வர் உத்தவ் தாக்கரே-யின் யாரும் பெரும் சாதனை.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூன்-202022:03:25 IST Report Abuse
Janarthanan வெறும் நான்சென்ஸ் என்று நிரூபணம் ஆகி உள்ளது ???
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-ஜூன்-202022:01:43 IST Report Abuse
A.George Alphonse ஐயோ ஆண்டவா இனிவரும் மழை நாட்களில் இது இன்னும் அதிக கோரமான நிலைக்கு போகுமே.என் மக்களை காப்பாற்றும் ஆண்டவா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X