மஹா.,வில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது| COVID-19 cases in Maharashtra exceeds 90,000 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (3)
Share
maharastra, covid-19, coronavirus, Mumbai, death toll, corona, coronavirus outbreak, covid-19 pandemic, corona, covid-19, mumbai, bmc, corona in Maharashtra, corona death, health, corona in mumbai, கொரோனா, மஹாராஷ்டிரா, மும்பை

மும்பை: மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்துள்ளது; மும்பையில் மட்டும் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 9) மட்டும் 2,259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது. அங்கு இதுவரை 90,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இன்று மட்டும் 120 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,289 ஆக அதிகரித்தது. கொரோனாவிலிருந்து இன்று 1,664 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,639 ஆனது. 47,979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் புதிதாக 1,015 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 51,100 ஆக உயர்ந்தது. இதுவரை அங்கு 1,702 பேர் பலியாகி உள்ளனர். 22,943 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், 26,455 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X