தெலுங்கானாவில் ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா தொற்று| Telangana reports 92 new COVID-19 cases | Dinamalar

தெலுங்கானாவில் ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (1)
Share

ஐதராபாத் : கொரோனா தாக்கம் அதிகரித்து தெலுங்கானாவில் நேற்று 92 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் பலியாகினர். இவ்வாறு அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. மற்ற சில மாநிலங்களை காட்டிலும் தெலுங்கானாவில் நோய் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. 25 மாவட்டங்களில் பாதிப்புகளே இல்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் புதிதாக 92 பேருக்கு நோய் பரவியுள்ளது.


latest tamil news



இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 5 பேர் பலியானதுடன் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உள்ளது. இதுவரை 1863 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X