‛ஆன்லைன்' வாயிலாக பார்லி., கூட்டம் நடத்த பரிசீலணை

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : பார்லிமென்டின் இரு சபைகளிலும், அனைத்து எம்.பி.,க்களும், தனி மனித இடைவெளியுடன் அமர்ந்து, கூட்டத்தில் பங்கேற்பதில் சிரமம் உள்ளதால், பாதி உறுப்பினர்களை சபைக்கு வரவழைத்தும், பாதி உறுப்பினர்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கூட்டத்தில் பங்கேற்க செய்யவும், மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத் தொடர்,
monsoon session, parliament, coronavirus, lockdown, venkaiah naidu, coronavirus india

புதுடில்லி : பார்லிமென்டின் இரு சபைகளிலும், அனைத்து எம்.பி.,க்களும், தனி மனித இடைவெளியுடன் அமர்ந்து, கூட்டத்தில் பங்கேற்பதில் சிரமம் உள்ளதால், பாதி உறுப்பினர்களை சபைக்கு வரவழைத்தும், பாதி உறுப்பினர்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கூட்டத்தில் பங்கேற்க செய்யவும், மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத் தொடர், அடுத்த மாதம் துவங்க உள்ளது.

எனவே, தனி மனித இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் அமைத்து, இரு சபைகளையும் நடத்த முடியுமா என்பது குறித்து, ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா ஆகியோர், அதிகாரிகளின் கருத்தை கேட்டறிந்தனர்.
அப்போது, 'பார்லிமென்டின் மத்திய அரங்கம் மற்றும் விஞ்ஞான் பவன் அரங்கம் உட்பட, இரு அரங்கிலும், அனைத்து எம்.பி.,க்களையும், தனிமனித இடைவெளியுடன் அமர வைத்து, கூட்டம் நடத்துவது சாத்தியமில்லை' என, அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


ஆன்லைன் வாயிலாகஇதையடுத்து, அன்றைய கூட்டத்தில், பங்கெடுக்க வேண்டிய உறுப்பினர்களை மட்டும், சபைக்கு வரவழைத்து, மற்றவர்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கூட்டத்தில் பங்கெடுக்க செய்யலாம் எனவும், பரிந்துரை வழங்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பார்லி கூட்டத் தொடரை, 'ஆன்லைன்' வாயிலாக, நடத்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயுமாறு, ஓம் பிர்லா மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, கூறப்படுகிறது.
மேலும், பார்லி கூட்டத் தொடர் நடத்துவதில், மாற்றங்கள் செய்ய வேண்டுமானால், அது குறித்து, இரு சபைகளிலும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் குறித்தும், அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளதாக, பார்லி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
10-ஜூன்-202016:31:55 IST Report Abuse
J.Isaac கூட்டம் நடத்தி என்னத்தை சாதிக்க போகிறார்கள். கொரனோ கவனம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனம்
Rate this:
Cancel
10-ஜூன்-202014:21:37 IST Report Abuse
ஆரூர் ரங் வெளிநடப்பு பண்ணமுடியாதே. ஆனா ஜோமணி😩 மாதிரி தூங்கலாம் . ராகுல் மாதிரி😉 கட்டிப்பிடிச்சு கண்ணடிக்க😉 கூட முடியாது . எனவே காங்கிரஸ் ஏற்காது
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
10-ஜூன்-202008:33:45 IST Report Abuse
ديفيد رافائيل ரொம்ப நல்லது, ஆன்லைனில் பார்லிமெண்ட் கூட்டம் நடத்தினால் சபையிலிருந்து வெளிநடப்பு செய்வது குறையும். ஒவ்வொரு MP யும் சுயமாக முடிவெடுத்து அவரவர் கருத்துகளை முன்வைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X