பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா மேலும் அதிகரிக்கும் அக்டோபரில் தான் கட்டுப்படும்

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
chennai news, tamil nadu news, dinamalar news, tamil nadu coronavirus

சென்னை :சென்னையை போல, புறநகர் மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளதாக, சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில், 500 எண்ணிக்கையில் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில், புறநகர் பகுதிகளில், 50 எண்ணிக்கையில் இருந்தது.இங்கு, 1,000த்தை கடக்கும் போது, 100 என்ற அளவில், புறநகர் மாவட்டங்களில் பாதிப்பு உள்ளது.தற்போதைய சூழலில், சென்னையில் பாதிப்பு இனிவரும் காலங்களில் இரட்டிப்பாகும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதேபோல், புறநகர் மாவட்டங்களான, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதிகரிக்கும் என்றும், சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் பாதிப்பு அதிகரித்து, அக்., மாதத்தில் தான், கொரோனா கட்டுப்பாட்டுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. சென்னை மாவட்டத்தோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட மக்கள், தினமும் நேரடி தொடர்பில் உள்ளனர். சென்னையில், அக்., மாதத்திற்கு பின், பாதிப்பு குறையும் போது, புறநகர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது.

எனவே, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதவ, கூடுதல் அதிகாரியாக, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் குமார் நியமிக்கப் பட்டுள்ளதை போல, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் நியமிக்க, அரசிடம் கூறியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
10-ஜூன்-202020:55:16 IST Report Abuse
Visu Iyer எதன் அடிப்படையில் அக்டோபர் என இவர்கள் சொல்கிறார்கள்..
Rate this:
Cancel
Krismoo - Vellore,இந்தியா
10-ஜூன்-202016:40:44 IST Report Abuse
Krismoo அக்டோபர் வரை கொரோன இருந்தாலே, அக்டோபருக்கு மேலே அவ்வளவு தான் . இப்பொழுது காயும் வெய்யிலிலே கண்ட்ரோல் ஆகவில்லை. அக்டோபருக்கு மேல் மழை காலம். எப்படி கட்டுப்படும் .
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
10-ஜூன்-202011:31:04 IST Report Abuse
Rameeparithi சுய கட்டுப்பாடு இல்லையென்றால் சென்னை சுடுகாடு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X