கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் வகுப்பு: தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Updated : ஜூன் 10, 2020 | Added : ஜூன் 10, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
Online Classes, High Court, school, corona, ஆன்லைன், வகுப்பு, தடை, ஐகோர்ட், வழக்கு

சென்னை: முறையான வழிமுறைகள் பிறப்பிக்காமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சரண்யா தாக்கல் செய்த மனு: ஊரடங்கு காலத்தில் பல பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த துவங்கி விட்டன. வசதி படைத்தவர்களிடம் 'ஸ்மார்ட் போன்' இருக்கும். இணையதள இணைப்பும் இருக்கும். அவர்களால் எளிதாக பின்பற்ற முடியும். ஆன்லைனில் படிக்கும் மாணவர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் வகுப்புகளில் இருந்து விலகி தேவையில்லாத விஷயங்களை இணையதளங்களில் பார்க்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


latest tamil news


இந்த தொழில்நுட்பத்தை நேர்மையுடன் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இணையதளத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால் பலர் திசைமாறி விடுகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். வகுப்பறைகளில் பின்பற்றக்கூடிய ஒழுக்கம் கண்ணியம் சூழ்நிலை ஆன்லைனில் கிடைக்காது. ஆசிரியர் மாணவர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றங்கள் இருக்க வேண்டும். கற்றலில் அது முக்கியம்.

ஆன்லைனில் பாடம் நடத்துவது ஆசிரியர்களுக்கும் சிரமம். ஆசிரியர்கள் பலர் ஆன்லைன் சூழ்நிலைக்கு பழகியிருக்க மாட்டார்கள். டிஜிட்டல் முறையில் பாடங்கள் நடத்துவதால் நகர்ப்புற - கிராமப்புற மாணவர்கள் இடையே சமச்சீரற்ற நிலை ஏற்படுகிறது.எனவே முறையான திட்டங்கள் வழிமுறைகளை ஏற்படுத்தாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூன்-202012:31:36 IST Report Abuse
chandran, pudhucherry ஆன் லைன் கிளாஸ் காரணமாக காலை 10 மணிக்கு எழும் என் பெண் 6.30 மணிக்கே எழுந்து விடுகிறாள். குளித்து விட்டு வந்து மொபைல் போனில் கிளாஸ்கு உட்கார்ந்து விடுகிறாள். ரெகுலர் கிளாஸ் போல டைம் டேபிள் தந்து வொர்க் தந்து இரவு ஹோம் ஒர்க் தந்து அதன்படி செய்கிறாள். கொரணாவால் வீட்டில் முடங்கி கிடந்து அவள் செய்த அட்காசம் தாங்கல. ஒழுங்கா எழுந்திரிப்பதில்லை. டைமிற்கு சாப்பிடறதில்ல. எந்த நேரமும் டிவி பார்த்திட்டு அண்ணன் கூட சண்டை. அப்பாடி இப்ப எந்த பிரச்சனையும் இல்லாம ஒழுங்கா போயிட்டிருக்கு. அவ ப்ரண்ட்ஸ்கிட்ட டிஸ்கஸ் என்கிட்ட டௌட் அண்ணன்கிட்ட பணிவா ஹெல்ப் என வீடே அமைதியா இருக்கு.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
10-ஜூன்-202012:21:29 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\வகுப்பறைகளில் பின்பற்றக்கூடிய ஒழுக்கம் கண்ணியம் சூழ்நிலை ஆன்லைனில் கிடைக்காது. ஆசிரியர் மாணவர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றங்கள் இருக்க வேண்டும். கற்றலில் அது முக்கியம்........\\..... இதுலே, இரண்டாம் பாதி ("ஆசிரியர், மாணவர்......முக்கியம்...") ரொம்ப கரெக்ட்........ முதல் பாதி ஐயத்துக்குரியது ............
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
10-ஜூன்-202011:18:18 IST Report Abuse
M S RAGHUNATHAN Conducting on line classes for nursery and primary class children is a child abuse. The HC should intervene immediately and direct the private schools to stop this menace forthwith. If the school or government do not act, the HC should unilaterally cancel the permission of the schoo and imppse exemplary punishment including sentencing them to jail. Heaven's won't fall one academic year is lost for small classes.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X