தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் உடல் அடக்கம்

Updated : ஜூன் 10, 2020 | Added : ஜூன் 10, 2020 | கருத்துகள் (189) | |
Advertisement
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் 62 வயதில் காலமானார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ., இவர் ஆவார். இவரது உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.மருத்துவமனையில் அனுமதிதி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், 62, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடந்த
politics, dmk, tamil nadu, tamil nadu news, DMK MLA J Anbazhagan, chennai news, coronavirus, covid 19, எம்.எல்.ஏ.,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம், ஜெ.அன்பழகன், அன்பழகன், காலமானார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் 62 வயதில் காலமானார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ., இவர் ஆவார். இவரது உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திமுக எம்எல்ஏ அன்பழகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்தார். 61 வயதாகும் அன்பழகன், பல்வேறு இடங்களுக்கு சென்று கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். காய்ச்சல் ஏற்பட்டதால், மே 4 ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறலால், அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததோடு ரத்த அழுத்தமும் இருந்ததால், தீவிர கண்காணிப்பில் இருந்தார். முதல்வர் பழனிசாமி அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தார். திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். ஆக்ஸிஜன் அளவு சீராகி, தானாக சுவாசிக்கும் நிலைக்கு வந்த அன்பழகனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி, இன்று காலை 8 மணிக்கு இறந்ததாக மருத்துமவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர், ஏற்கனவே 2001 மற்றும் 2011 ல் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் பலியானது, அவருடன் பழகிய பிற எம்.எல்.ஏ.க்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவருக்கு 62வது பிறந்தநாள் அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பிற கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

மருத்துவமனையில் அனுமதிதி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், 62, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடந்த 2ம் தேதி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கு, 'வென்டிலேட்டர்' வாயிலாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


latest tamil news


பிறந்த நாளன்று மரணம்


இந்நிலையில், அவரது உடல்நிலையில் மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து இன்று(ஜூன் 10) காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் காலமானார். அவரது உடல், கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. 1958 ம் ஆண்டு ஜூன் 10 அன்று பிறந்தவர். பிறந்த நாள் அன்றே அவர் காலமானார்.
3 முறை எம்எல்ஏ,பி.ஏ., பொருளாதாரம் படித்துள்ள அவர், கடந்த 2001 ல் முதன்முறையாக சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சினிமா பட தயாரிப்பாளராகவும், பட விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

அன்பழகன் மறைவுக்கு கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


முதல்வர் இரங்கல்

ஜெ. அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இ.பி.எஸ்., இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் தெரிவித்து முதல்வர் வெளியிட்ட டுவீட்


துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


ஸ்டாலின் இரங்கல்


தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெ.அன்பழகன் இறந்த செய்தி இதயத்தில் மின்னலும், இடியும் ஒரு சேர இறங்கியது போல் உள்ளது. உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை அயராது பாடுபட்டார். அன்பழகன் மறைந்துவிட்டார் என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. அவரது மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் 3 நாட்கள் திமுக கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும். திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.உடல் அடக்கம்


அன்பழகனின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் உள்ள அவரது தந்தை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்ட இடமருகே, அடக்கம் செய்யப்பட்டது. மயானத்தில் வெளியே கூடியிருந்த திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (189)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yezhai thamizhan - Rio,பிரேசில்
16-ஜூன்-202010:03:16 IST Report Abuse
yezhai thamizhan தகனம் செய்வதற்கு பதிலா அடக்கம் செய்ததின் பின்னணி என்ன ?
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
15-ஜூன்-202013:37:24 IST Report Abuse
s.rajagopalan தி மு கவினருக்கு பெரும் இழப்பு. கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு தொண்டு செய்வதில்' தீவிரமாக' ஈடுபட்தால் நோய்க்கு பலியாகிவிட்டாராம் . இருக்கலாம். இவர் 'தொண்டின்' மறு பக்கமும்' இதற்கு காரணமாக இருக்கலாம்
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
11-ஜூன்-202009:42:32 IST Report Abuse
சோணகிரி ஊழல் தீயமுக அடிமை ...,
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஜூன்-202016:59:52 IST Report Abuse
skv srinivasankrishnaveniINTHA ALUM IVIKA APPAARUM INTHUKKALUKKUM MUKIKIYAMAA BRAAMINSKKU M VIROTHIKAL KODILEPANAM VAANGKINDU NAMMA PILLAIYAARKOYILAI IDICHCHU MASUTHIKAATTAVE THULUKKAALUKKU SALAAM POTTAANUKA...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X