பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 2.76 லட்சம் பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 9,985 பேருக்கு தொற்று

Updated : ஜூன் 10, 2020 | Added : ஜூன் 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.76 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745 ஆகவும் அதிகரித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,985 பேர்
India, CoronaVirus_Update, DeathCount, Coronavirus, COVID-19,  corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.76 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 206 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 745ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 90,787 - 3,289
தமிழகம் - 34,914 - 307
டில்லி - 31,309 - 905
குஜராத் - 21,014 - 1,313
உத்தர பிரதேசம் - 11,335 - 301
ராஜஸ்தான் - 11,245 - 255
மத்திய பிரதேசம் - 9,849 - 420
மேற்கு வங்கம் - 8,985 - 415
கர்நாடகா- 5,921 - 66
பீஹார் - 5,459 - 32
ஹரியானா - 5,209 - 45
ஆந்திரா - 5,070 - 77
காஷ்மீர் - 4,346 - 48
தெலுங்கானா - 3,920 - 148
ஒடிசா- 3,140 - 9
அசாம் - 2,937 - 4
பஞ்சாப் - 2,719 - 55
கேரளா - 2,096 - 16
உத்தரகாண்ட் - 1,537 - 13
ஜார்க்கண்ட் - 1,411 - 8
சத்தீஸ்கர் - 1,240 - 6
திரிபுரா - 864 - 1
ஹிமாச்சல பிரதேசம் - 445 - 5
கோவா - 359 - 0
சண்டிகர் - 323 - 5
மணிப்பூர் - 304 - 0
புதுச்சேரி - 127 - 0
நாகலாந்து - 127 - 0
லடாக் - 108 - 1
மிசோரம் - 88 - 0
அருணாச்சல பிரதேசம் - 57 - 0
மேகாலயா-43-1
அந்தமான் - 33 - 0
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 22 - 0
சிக்கிம் - 13 - 0

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஜூன்-202004:33:01 IST Report Abuse
J.V. Iyer வேகமாக நாலாம் இடத்திற்கு முன்னேறுகிறது இந்தியா இன்னும் சிலநாட்களில் மூன்றாம் அல்லது இரண்டாம் இடம். இந்த கருணாவை பரப்புபவர்களை தண்டிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
10-ஜூன்-202011:56:54 IST Report Abuse
Panneerselvam Chinnasamy வேகம் எடுக்கும் கொரானா தொற்றை கட்டுப்படுத்த என்ன செய்வது? வேண்டுமென்றால் ஒருமாதம் வேலை. ஒரு மாதம் lockdown என்று நாம் இருக்கலாம்.அந்தவிதமாக நோய்தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் (மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்படாவண்ணம்) வைத்துக்கொள்ள முடியும். அதே சமயம் ஒரு மாதம் வேலைசெய்வதால் மக்கள் பூவா விற்கு வழி செய்யலாம்.
Rate this:
Cancel
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
10-ஜூன்-202010:09:44 IST Report Abuse
sankaran vaidyanathan தொற்று நோய் ஏழை எளியவர்களை மிகவும் தொற்றுகிறது முக்கியமாக வசிக்கும் இடம் சுற்றுப்புற சூழல் சுகாதாரம் இவைகளினால் காற்றின் மூலம் புலப்படாத நுண் கிருமிகள் சுவாசிப்பதின் மூலம் நுரை ஈரலைஅடைந்து அங்கு ங்கிநாளுக்கு நாள் விருத்தியாகி சுவாச கோளாறை ஏற்படுத்தும் தாக்கம் தான் விளைவுகள் என்று கூறப்படுகிறது சாதாரண சளி காய்ச்சல்இருமலுக்கு சிறிது வசதி படைத்தோர் பெறும் ஊசி மருந்துகள் உடலில்நோய் பரவுதலைகட்டுப் படுத்துவதைக் கண்டு அறிய பட்டுள்ளது இதனை இப்பொழுது பரிசீலித்து பார்க்க முடியாதா ஆரம்ப கட்ட நிலையிலேயே மனித உடலில் நோய் தடுப்பாற்றல் குறைவினால் ஏற்படும் விளைவுகளுக்கு 'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்' குறள் 948
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X