சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அமைச்சர் தொகுதிக்கு பறந்த நிவாரண பொருட்கள்!

Added : ஜூன் 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அமைச்சர் தொகுதிக்கு பறந்த நிவாரண பொருட்கள்!

அமைச்சர் தொகுதிக்கு பறந்த நிவாரண பொருட்கள்!

''ஒரே குடும்பத்துக்கு பதவியை தாரை வார்க்கணுமான்னு, கலகக் குரல் எழும்புதுங்க...'' என, பெஞ்சில் அமர்ந்தபடியே, பேச்சை ஆரம்பித்தார்,
அந்தோணிசாமி.''எந்தக் கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க.,வை ஆரம்பிச்சு, 71 வருஷமாகுதுங்க... இந்தக் கட்சியின் பொதுச் செயலரா, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், அன்பழகன்னு மூணே பேர் தான், இதுவரைக்கும் இருந்திருக்காங்க...
''இந்த மூணு பேருமே, முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவங்க... ஒரு காலத்துல, எதிர்க்கட்சிகளால, 'முதலியார் கட்சி'ன்னு அழைக்கப்பட்ட, தி.மு.க.,வுல, இப்ப அந்த சமுதாயத்தினருக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லைங்க...
''அதனால, துரைமுருகனுக்கு பொதுச் செயலர் பதவியை குடுக்காம, முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கே குடுக்கணும்னு, சமூக வலைதளங்கள்ல கருத்துகள் பரவிட்டு இருக்கு...
''அதுவும் இல்லாம, துரைமுருகனுக்கு காட்பாடியின் நிரந்தர எம்.எல்.ஏ., சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர், கட்சியில பொருளாளர் பதவி, அவரது மகனுக்கு,
எம்.பி., பதவின்னு நிறைய குடுத்தாச்சு... 'ஒரே குடும்பத்துக்கு பதவிகளை தாரை வார்க்கக் கூடாது'ன்னும் தி.மு.க., முன்னணி பிரமுகர்களே முணுமுணுக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தன் மாநில மக்களுக்கு, மின்னல் வேகத்துல உதவி செஞ்சிருக்காரு பா...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அன்வர்பாய்.
''யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சென்னை, சவுகார்பேட்டை, வேப்பேரி பகுதியில, ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் வேலை பார்த்துட்டு இருந்தாங்க... இவங்க, சொந்த ஊருக்கு போக ஏற்பாடு பண்ணும்படி, தங்களது மாநிலத்தைச் சேர்ந்த, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு, கோரிக்கை வச்சிருக்காங்க பா...
''அவரும் துரிதமா செயல்பட்டு, ராஜஸ்தான் மாநில அரசிடம் பேசி, 1,500 இ - பாஸ்களை ஏற்பாடு பண்ணி அனுப்பிச்சிருக்கார்... அதுவும் இல்லாம, 2,500 தொழிலாளர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு பண்ணி, சென்னையில இருந்து, ரயில்கள் மூலமா, சொந்த மாநிலத்துக்கு போக ஏற்பாடு செஞ்சிருக்காரு பா...'' என்றார்,
அன்வர்பாய்.
''அடிச்சு பிடிச்சு நிவாரண பொருட்களை அனுப்பியிருக்கா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் குப்பண்ணா.
''யார்னு விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் சொந்த தொகுதி மக்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுங்கன்னு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, சென்னையில இருந்து ஒரு உத்தரவு போனது... இந்த உத்தரவை, வட மாவட்ட கல்வி அதிகாரிகள் பெருசா கண்டுக்கலை ஓய்...
''ஆனா, 'டிரான்ஸ்பர்' பீதியில, தென் மாவட்ட அதிகாரிகள், விறுவிறுப்பா களத்துல இறங்கி, யார் யாரையோ பிடிச்சு அரிசி, பருப்பு, எண்ணெய்னு வாங்கி குவிச்சுட்டா... சூட்டோடு சூடா, ஈரோடு மாவட்டம், கோபிக்கும் லாரிகள் மூலமா அனுப்சுட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய, நண்பர்கள் குழு கலைந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-ஜூன்-202006:03:40 IST Report Abuse
D.Ambujavalli அமைச்சர் தொகுதிக்கு பொருட்கள் அனுப்புவதைவிட கல்வித்துறை அதிகாரிகளுக்கு வேறு முக்கிய வேலை உண்டா ? பாடு அவர்களுக்கு, பெயர் அமைச்சருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X