மாஸ்கோ : கொரோனா பாதிப்பு அதிகரித்து ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,404 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. பிரேசில் 2 வது மற்றும் ரஷ்யா 3 வது இடத்திலும் உள்ளன. நோயின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளின் சராசரி பாதிப்பு 10 ஆயிரமாக உள்ளது. ரஷ்யாவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு நடவடிக்கையை மேற்கொள்கிறார். இந்நிலையில் நேற்று கொரோனா தொற்றால் 8,404 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 493,657 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 216 பேர் பலியாகினர். ரஷ்யாவில் கொரோனாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,358 ஆக உயர்ந்தது. நாட்டில் நோய் பாதிப்புகளில் இருந்து 252,783 பேர் குணமடைந்துள்ளனர். நோய் பாதிப்பு காரணமாக மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.