பொது செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு தேர்வில்'ஆல் பாஸ்': குரூப் தேர்வு குறித்து விளக்கம்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 10, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
பத்தாம் வகுப்பு தேர்வு, 'ஆல் பாஸ்': குரூப், தேர்வு குறித்து விளக்கம்

மதுரை: கொரோனா தொற்று அச்சம் காரணமாக, தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மதிப்பெண் கணக்கீடு, பிளஸ் 1ல் குரூப்புகள் தேர்வு, டிப்ளமோ உள்ளிட்ட, பிற வகை படிப்புகளை படிக்க முடியுமா என, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:இத்தேர்ச்சி வாயிலாக, பிளஸ் 1ல் குரூப்புகள் தேர்வு மற்றும் டிப்ளமோ படிக்க, எந்த தடையும் இருக்காது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 80 சதவீதம்; அவர்களின் வருகை பதிவின் அடிப்படையில், 20 சதவீத மதிப்பெண் வழங்கப்படும்.
கடந்தாண்டுகள் போன்றே, இந்தாண்டும் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால், உயர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் பாதிப்பு இருக்காது. மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் ஆலோசனை அடிப்படையில் தான், தேர்வு ரத்து முடிவை அரசு எடுத்துள்ளது. இது, மாணவருக்கும், பெற்றோருக்கும் நிம்மதி அளித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


மாற்றம் அவசியம்



கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறியதாவது:பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை. பிளஸ் 1ல் மாணவர்கள் தங்களை நல்ல முறையில் தயார்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு காலத்தில், கல்வித்துறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. இனிவரும் காலங்களில், சமூக இடைவெளி என்பது தவிர்க்க முடியாது. இதனால், பிளஸ் 1ல், வகுப்பறைகள், மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் பணி, ஆன்லைன் கற்பித்தல் என, பல்வேறு மாற்றங்கள் தேவை. குரூப்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக வேண்டும். படிப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுக்கும் அளவிற்கு, மாணவர்கள் கல்வி கற்பதும் அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.


பொதுத் தேர்வு ரத்துக்கு அரசாணை வெளியீடு





பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து அறிவிப்பை அங்கீகரித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பிரச்னையால், இந்த ஆண்டு நடக்கவிருந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; பிளஸ் 1 பொதுத் தேர்வும் ரத்தாகியுள்ளது. இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணையில் கூறியிருப்பதாவது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பிளஸ் 1ல் விடுபட்ட பாடங்களில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
இதற்கான வழிகாட்டு முறைகளை பின்பற்றி, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். பிளஸ் 2வில், ஒரு பாடத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு, பின்னர் மறுதேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
11-ஜூன்-202017:33:51 IST Report Abuse
K.P  SARATHI முக்கியமான மூன்று எக்ஸாம் அறிவியல், கணக்கு , ஆங்கிலம் , வைத்துருக்கலாம், காரணம் குரூப் செலேக்ஷன் இவை மிக முக்கியம்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஜூன்-202016:04:47 IST Report Abuse
skv srinivasankrishnaveni பத்தாம்வகுப்பிலே பெரும் மதிப்பெண்களைப்பொறுத்து க்ரூப் கிட்டும் குழந்தைகளுக்கு ஆல் பாசினாலே நன்னப்படிக்கும் பிள்ளைகள் சுமாராகப்படிப்போர்கள் எல்லாம் குழம்புவாங்க நோ ரேங்க் னு சொன்னீங்க அடுத்துகோரநா உபாயம் மாணவர்கள் தலையே கைவச்சுட்டுது பாவம் நன்னப்படிக்கும் பிள்ளைகள் தான் அவதி பாடுவாங்க
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-ஜூன்-202012:07:11 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan . எதிர்க்கட்சிகள் கத்துவது வழக்கம் . டாஸ்மார்க் திறந்த பொது கூச்சலிட்டார்கள் . இன்று டாஸ்மார்க் சென்றவன் யாருக்கும் காரோண வரவில்லை
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
11-ஜூன்-202014:33:53 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அப்படியா உனக்கு என்ன 10 லட்சம் பிள்ளைகள் 3 லட்சம் ஆசிரியர்கள் 2300 பரீட்ச்சை ஹால் இடத்துக்கு வேலை செய்ய ஆல் இங்கு வந்து போக CONVEYANCE என்று இவ்வவ்ளு பேர் உயிருடன் விளையாட சொல்லுகிறீர்களா நீ வெள்ளி தேடி ஓடிட அப்பவும் பேச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X