சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்தது

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 10, 2020 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை :தமிழகத்தில் காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்தது. தி.மு.க., - - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 97 ஆக குறைந்தது.பிப்ரவரி, 27ல், திருவொற்றியூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., - கே.பி.பி.சாமி மறைந்தார். அதற்கு அடுத்த நாள், குடியாத்தம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., காத்தவராயன், உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், தி.மு.க.,வின் பலம், 100ல் இருந்து, 98 ஆக குறைந்தது.இந்நிலையில், கொரோனா
சட்டசபையில்  தி.மு.க.,  எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்தது

சென்னை :தமிழகத்தில் காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்தது. தி.மு.க., - - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 97 ஆக குறைந்தது.பிப்ரவரி, 27ல், திருவொற்றியூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., - கே.பி.பி.சாமி மறைந்தார்.

அதற்கு அடுத்த நாள், குடியாத்தம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., காத்தவராயன், உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், தி.மு.க.,வின் பலம், 100ல் இருந்து, 98 ஆக குறைந்தது.இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, சேப்பாக்கம்- - திருவல்லிக்கேணி தொகுதி, எம்.எல்.ஏ., அன்பழகன், நேற்று காலை மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் காரணமாக, சட்டசபையில், திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என, மூன்று சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையும், 97 ஆக குறைந்துள்ளது. சட்டசபை தொகுதி காலியாக இருந்தால், ஆறு மாதங்களுக்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, ஓராண்டு கூட இல்லாததாலும், தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், மூன்று தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


'பாழாய் போன கொரோனா'



'பாழாய் போன கொரோனா, என் அன்பழகனையும் தொற்றி விட்டது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:சட்டசபையில், ஜெ.அன்பழகன் சிங்கமென கர்ஜிப்பார். அக்காட்சி இப்போதும், என் கண்களில் நிழலாடுகிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, அன்பு எழுந்தாலே, ஆளுங்கட்சியினர் அனைவருமே பயத்தால் நடுங்குவர்; அவருக்குப் பதில் சொல்லப் பயப்படுவர். தன் உடல்நிலையை பற்றியும் கவலைப்படாமல், உற்சாகத்துடன் தொய்வே இல்லாமல் பணியாற்றியவர், அன்பழகன்.

பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டால், சென்னையில் கம்பீரமாக நடத்திக் காட்டுபவர். கொரோனா தொற்று காலத்திலும், சளைக்காமல் பணியாற்றினார். என்னை, அதிகமாக வெளியில் போகாதீர்கள் என, சொல்லிக் கொண்டே இருந்தார். அவரையும், நான் அதிகம் அலையாமல், உட்கார்ந்த இடத்தில் இருந்தே, பணிகளை கவனியுங்கள் என, தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனாலும், எல்லா இடங்களுக்கும், அவரே போய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பாழாய்ப் போன கொரோனா, என் அன்பழகனையும் தொற்றி விட்டது.இவ்வாறு, ஸ்டாலின் பேசியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
12-ஜூன்-202019:58:37 IST Report Abuse
சோணகிரி எம் பி க்கள் நிறைய பேரு இருக்காங்களே... அவங்களுக்கும்.....
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜூன்-202020:23:47 IST Report Abuse
Chandramoulli இறுதி சடங்கில் அதிக அளவில் கூட்டம் இருந்தது . எல்லோரும் பரிசோதனை செய்ய வேண்டும் . இனிமேல் இப்படி நிகழாமல் இருக்க வேண்டும் .
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
11-ஜூன்-202018:41:47 IST Report Abuse
karutthu இன்னும் இரண்டு எம். எல்.எ. கள் மறைவார்கள். இது ஏற்கனவே ஸ்டாலினுக்கு தெரியும். என்று கூறும் பாஸ்கருக்கு இது எப்படி தெரியும் ? வீணாக உளறி எதிலாவது மாட்டிக்கொள்ளாதீர்கள் அவர்கள் பெரும் துக்கத்திலிருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X