சித்தா சிகிச்சை வெற்றி: புழல் கைதிகள் தொற்றிலிருந்து மீண்டனர்

Updated : ஜூன் 11, 2020 | Added : ஜூன் 10, 2020 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பீதி அடைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தனித்த சித்தா சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. சென்னை புழல் சிறையில் 25 கைதிகளுக்கு அளிக்கப்பட்ட சித்தா சிகிச்சையில் ஒரு வாரத்தில் 23 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள இருவரும் தொற்றின் தன்மை குறைந்து குணமாகி
சித்தா சிகிச்சை,புழல் கைதிகள், மீண்டனர், Siddha, homeopathy, medicine, treatment, Covid-19 in TN, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus cases, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, TAMIL NADU, chennai

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பீதி அடைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தனித்த சித்தா சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. சென்னை புழல் சிறையில் 25 கைதிகளுக்கு அளிக்கப்பட்ட சித்தா சிகிச்சையில் ஒரு வாரத்தில் 23 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள இருவரும் தொற்றின் தன்மை குறைந்து குணமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சில மாவட்டங்களில் குறைந்தாலும் தலைநகரான சென்னை அதையொட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.மாநிலம் முழுவதும் இதுவரை 36 ஆயிரத்து 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் பாதிப்பு 26 ஆயிரத்தை நெருங்கி விட்டது.தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் நிலைமை என்னவாகுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். பலர் சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதற்கு தீர்வு காண பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் அலோபதியுடன் சித்த மருத்துவத்தையும் சேர்த்து ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பகுதிகளில் பாதிப்பின் தன்மை வெகுவாக குறைந்தது. இதையடுத்து சோதனை ரீதியாக தனித்த சித்தா சிகிச்சைக்கு அரசு அனுமதி அளித்தது.


இதற்காக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் கணேஷ் தேசிய சித்தா ஆராய்ச்சி மைய இயக்குனர் மீனாகுமாரி, மூத்த டாக்டர் ஜெய்பிரகாஷ் நாராயணன், சித்தா டாக்டர் வீரபாபு மற்றும் அரும்பாக்கம் சித்த மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் தனித்த சித்தா கிகிச்சையில் இறங்கி உள்ளனர். சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லுாரியில் தனித்த சித்தா பிரிவு துவக்கப்பட்டு 99 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதில் முதற்கட்டமாக சிகிச்சைக்கு வந்த 30 பேருக்கு தற்போது பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுக்காக சித்தா குழுவினர் காத்திருக்கின்றனர்.


புழல் சிறையில்இந்நிலையில் புழல் சிறையில் சித்தா டாக்டர் வீரபாபு குழுவினர் அளித்த சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. புழல் சிறையில் ௩௦ கைதிகள் ஒரு பணியாளர் என ௩௧ பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.அவர்களில் 25 கைதிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கபசுர குடிநீர் மூலிகை தேநீர் சூரிய குளியல் என சித்தா சிகிச்சை தரப்பட்டது.ஒரு வார சிகிச்சை முடிந்து நடந்த பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று முற்றிலும் நீங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகம் இருந்த இரண்டு பேருக்கு தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது. அவர்கள் ஓரிரு நாளில் பூரண குணம் அடையும் நிலையில் உள்ளனர். இது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கொரோனா தொற்று தடுப்புக்கான சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அலோபதி சிகிச்சை மட்டுமின்றி தனித்த சித்தா சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தனித்த சித்தா சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக வந்துள்ள தகவல்க மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னையில் ஜவஹர் கல்லுாரியில் தனித்த சிகிச்சை தொடர்கிறது. பாதிப்புக்கு உள்ளானோர் விருப்பத்தின் அடிப்படையில் எந்த முறை சிகிச்சையும் எடுக்கலாம்.ஓமியோபதி மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் வீரபாபு கூறியதாவது:அரசு அனுமதியுடன் புழல் சிறையில் அளித்த தனித்த சித்தா சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில் 23 பேருக்கு பாதிப்பு நீங்கியுள்ளது பெரும் நம்பிக்கையை அளித்துஉள்ளது.சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் இன்ஜி. கல்லுாரியில் உள்ள தனித்த சித்தா மையத்தில் அரசு அனுப்பியோர் மட்டுமின்றி பொதுமக்களும் தாமாக சிகிச்சைக்கு வந்துள்ளனர்.சித்தா சிகிச்சை பெறுவோரில் முதற்கட்டமாக 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் முடிவுகள் வெளியாகும்.கொரோனா பாதிப்பு வராமல் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கொரோனா பாதிப்பு வந்தால் அச்சம் வேண்டாம்; தமிழகத்தின் சித்த மருத்துவம் கை கொடுக்கும்.அரசும் சித்தா உள்ளிட்ட சிகிச்சைக்கு ஆதரவு அளித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


இருவருக்கு தொடருது சிகிச்சைசிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார் சிங் கூறியதாவது:புழல் மத்திய சிறையில் ஒரு பணியாளர் மற்றும் 30 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதேபோல மதுரையில் இரண்டு, நெல்லையில் இரண்டு, கடலுாரில் நான்கு, திருச்சி சிறையில் ஒன்று உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது இவர்கள் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடுதலாக சித்த மருத்துவமும் அளிக்கப்பட்டது. தினமும் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக 38 கைதிகள் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தப்பித்து பூரண குணமடைந்துள்ளனர். இரண்டு கைதிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களும் விரைவில் குணடைவர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
17-ஜூன்-202010:15:52 IST Report Abuse
Tamilnesan டிவி செய்திகளில் எந்த நடிகைக்கு என்றைக்கு திருமணம் போன்ற செய்தியைத்தான் சொல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் பரபரப்பை உண்டாக்குவது தான் அவர்கள் இலக்கு. அவர்களை பொறுத்தவரை கொரநா நோய் தொற்று விரைவில் கட்டுக்குள் வரக்கூடாது. இதை வைத்து அரசியல் செய்து குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதே டிவி ஊடகங்களின் எண்ணம். ஏனென்றால், அதிகபட்ச டிவி ஊடகங்கள் திமுக வசம் உள்ளது. அலைக்கற்றை ஊழல் பணத்தின் ஒரு பகுதியான ரூபாய் முந்நூறு கோடிகளை முதலீடாக்கி கலைஞர் டிவி குழுமம் தொடங்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். இது போன்ற அக்கிரமம் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா? இதுவே வளைகுடா நாடாக இருந்திருந்தால் குற்றவாளி மொத்த குடும்பத்தையும் தூக்கில் போட்டிருப்பார்கள். உலகிலேயே ஜனநாயகம் என்கிற போர்வையில் அரசியல்வியாதிகளுக்கு தண்டனைகள் இல்லாமல் இருக்கும் நாடு இந்தியா தான் என்பதில் மாற்று கருத்தில்லை. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
15-ஜூன்-202006:18:48 IST Report Abuse
B.s. Pillai Siddhar Gorakkar and his Guru Machchamuni were experts siddha medicines and Gorakkar is the author of our " Panchangam " means htey were experts in Astronomy also .It is said Gorakkar had changed the positions of NavaGraha to bless the world free from epidemics prevailed at that time. Ramalinga swamigal recites medicines for all diseases in his poem. but we forgot to study Tamil literature and going after English study.The main reason for any outbreak of any disease is the weak immunity in the body. Our old tem of food was building this immunity .Now we are eating fast food like mcDonald,KFC and Pizza and cold drinks like coke which are breeding ground for disease. My son was bringing potato chips of some famous foreign company every week once.I ate it for 4 weeks.5th week I had severe stomach ache after eating this chips. So I told my son not to buy this chips for me.When in 2013, I got bed ridden due to immobility of body, Allopathy could not even find out the reason, but it was Kottakal Ayurved sala which diagnosed it and treated me and within one month concentrated treatment of medicines and oil massage, I am able to regain my full mobility. When I was coughing continuously dry cough, no amount of medicines could stop it. Then Ayurved Dr. prescribed two different type legiyams.I was surprised. By taking only one time this legiyam, my cough stopped.I gave this to my driver who was coughing continuously in the night. He also got cured We have wonderful medicines but we were diverted to a different road so that our wealth can be swallowed permanently without any cure but by giving only temporary cure. Have faith in our old tem of medicine. I do not say that allopathy is totally wrong.It is superior in surgery and other new diseases. but follow our tem of food and be preventive of such killing diseases.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-202006:14:55 IST Report Abuse
Fastrack கோரோனோ நோயாளிகள் உடலில் இருக்கும் நோய் தடுப்பு சக்தியால் குணமாகிறார்கள் ... அமெரிக்காவிலும் ஐரோப்பா நாடுகளிலும் நிறைய இறக்கிறார்கள் .. சித்த மருந்துகளை நம்பி கவன குறைவா இருக்க வேண்டாம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X