'ஆன்லைன்' வகுப்புகளுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மனுவுக்கு பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனு:ஊரடங்கு காலத்தில் பல பள்ளிகள் 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்த துவங்கி விட்டன. ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் தவறான வழிக்கு செல்லும் வாய்ப்பு
'ஆன்லைன்' வகுப்புகளுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை : 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மனுவுக்கு பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனு:ஊரடங்கு காலத்தில் பல பள்ளிகள் 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்த துவங்கி விட்டன. ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் தவறான வழிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் தேவையில்லாத விஷயங்களை இணையதளங்களில் பார்க்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஆசிரியர் மாணவர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றங்கள் இருக்க வேண்டும்; கற்றலில் அது முக்கியம்.எனவே முறையான திட்டங்கள் வழிமுறைகளை ஏற்படுத்தாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில்மூத்த வழக்கறிஞர்எஸ்.பிரபாகரன்,வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ண குமார் ஆஜராகினர்.மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், வழக்கறிஞர்வெங்கடசாமி பாபு,தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், கல்வித் துறைசார்பில் சிறப்பு பிளீடர் முனுசாமியும் ஆஜராகினர்.மூத்த வழக்கறிஞர்எஸ்.பிரபாகரன் ''இணையதளத்தில் ஆபாச விளம்பரங்கள் வருவதால் அதை பார்க்கும் சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு வழிமுறைகள் இல்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் முறை உகந்ததாக இருக்காது'' என்றார்.

அப்போது நீதிபதிகள் 'இது ஒரு முக்கியமான பிரச்னை தான். ஆன்லைன் முறையை எப்படி
ஒழுங்குபடுத்துவது; என்ன வழிமுறைகள் உள்ளன; புதிதாக வழிமுறையை ஏற்படுத்தலாமா என்பதை பார்க்கலாம். தற்போதைய நிலையில் தடை விதிக்க முடியாது' என்றனர்.தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் பொது முக்கியத்துவம் உள்ளது. அதனால் மத்திய மாநில அரசுகள் மற்றும் கல்வித் துறைக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது.மத்திய மாநில அரசுகள் மற்றும் கல்வித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.விசாரணை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்குள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
11-ஜூன்-202016:11:46 IST Report Abuse
vbs manian கர்நாடகாவில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாவது வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புகளுக்கு அரசு தடை.
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
11-ஜூன்-202014:37:35 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan முன்னாடி கோர்டுக்கு மொபைலை கொண்டுவரக்கூடாது என்றார்கள், இப்போ கோர்ட்டே மொபைலில் நடக்குது. முன்னர் கோயிலுக்குள் மொபைலை கொண்டுவரக்கூடாது என்றார்கள், இப்போ கோயில் திருவிழாவை மொபைலில் காட்டுகிறார்கள். முன்னர் டாக்டர் நோயாளியை நேரில் பார்த்து, நாடி பிடித்து மருத்துவம் செய்தார். இப்போது மொபைலில் டாக்டரிடம் பேச சொல்கிறார்கள். முன்னர் மொபைல் பார்த்தால் மாணவ, மாணவிகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று சொன்னார்கள். இப்போது மொபைலில் படியுங்கள் என்கிறார்கள். முன்னர் ஹோட்டலில் போய் சாப்பிட்டனர். இப்போது மொபைலில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடுகின்றனர். முன்னர் அலுவலகம் சென்று வேலை பார்த்தனர். இப்போது வீட்டிலிருந்தே மொபைலை இணைப்பு மூலம் வேலை செய்கின்றனர். முன்னர் தினசரி பேப்பர் படித்தனர். இப்போது மொபைலில் செய்தி படிக்கின்றனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் கோரோனா வைரஸ் எல்லோரையும் முட்டாள்களாக ஆக்கிவிட்டது.
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
11-ஜூன்-202011:33:30 IST Report Abuse
Raja இணைய வழி கல்வியில் உள்ள முக்கிய பிரச்னையை யாரும் கேட்பதில்லை. இணைய வழி கல்வி ஒரு ஏற்றத்தாழ்வை உருவாக்கும். வசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வி பெறக்கூடிய நிலையை ஏற்படுத்தும். அதுவும் ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் அதற்கான வசதிகளை பெற்றோர் ஏற்படுத்தி தர வேண்டும். இது அவர்களுக்கு கூடுதல் சுமை. அதுவும் பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் வீட்டில் குழந்தைகளை எப்படி கண்காணிப்பார்கள். ஒரு நாளில் தொடர்ந்து 5-6 மணி நேரம் கணினியின் முன் அமர்ந்து கற்பதால் குழந்தைகளின் உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் இருக்கு. இப்படி பல கேள்விகள் உள்ளது. இதற்க்கு அரசு தெளிவான விளக்கங்களை குடுத்த பிறகு இணையவழி கல்வியை அரசு அனுமதிக்க வேண்டும். அதே போல் இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க படக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X