புதுடில்லி: டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை டில்லியில் 32,810 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரேனாவுக்கு 48 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரேனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது.

டில்லியில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் அங்கு தினசரி 1,000க்கும் அதிகமாக பாதிப்பு அடைந்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 12,245 பேர் குணமடைந்தனர். இவ்வாறு டில்லி சுகாதாரத் துறை தெரிவித்தது.