தென் ஆப்ரிக்காவில் இந்து மதத்துக்கு எதிரான பேஸ்புக் வீடியோ நீக்கம்

Updated : ஜூன் 11, 2020 | Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஜோகன்ஸ்பெர்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க இளைஞர் ஒருவர் இந்து மதத்தை விமர்சித்து பதிவிட்ட பேஸ்புக் வீடியோ, தென் ஆப்ரிக்க இந்து மகா சபாவினரின் புகாருக்கு பின்னர் அகற்றப்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகருக்கு தெற்கே இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் சாட்ஸ்வொர்த் பகுதியில் ஒரு சிறு கூட்டத்தினரிடையே சிமியோன் பிராட்லி ஷெட்டி என்ற நபர் இந்து மத
Facebook, Anti Hindu, South Africa, பேஸ்புக், இந்து, மதம், வீடியோ, நீக்கம்

ஜோகன்ஸ்பெர்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க இளைஞர் ஒருவர் இந்து மதத்தை விமர்சித்து பதிவிட்ட பேஸ்புக் வீடியோ, தென் ஆப்ரிக்க இந்து மகா சபாவினரின் புகாருக்கு பின்னர் அகற்றப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகருக்கு தெற்கே இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் சாட்ஸ்வொர்த் பகுதியில் ஒரு சிறு கூட்டத்தினரிடையே சிமியோன் பிராட்லி ஷெட்டி என்ற நபர் இந்து மத நம்பிக்கைகளை விமர்சித்து பேசுகிறார். இவர் தன்னை தானே கிறிஸ்தவ மத போகர் என கூறிக்கொண்டு இவ்வாறு பேசுகிறார். இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு பிற மதத்தவர்களின் கண்டனத்தையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்க இந்து மகா சபா சார்பில் சார்பில் ஷெட்டி மற்றும் அவர் சம்பந்தப்பட்ட சர்ச்சுக்கு எதிராக முறையாக புகாரளித்தனர்.


latest tamil news


அதன் பிறகு சர்ச்சைக்குரிய வீடியோ பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது. இது குறித்து தென் ஆப்ரிக்க இந்து மகா சபா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை திரும்ப பெற வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் யாரிடமிருந்தும் வந்தாலும் இந்துக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். என்று எச்சரிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு சமயத்தில் இது போன்று கூட்டம் நடத்திய ஷெட்டி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
11-ஜூன்-202018:44:48 IST Report Abuse
Siva எல்லையற்றது மதம். தனி மனிதன் உருவாக்கியது கட்சி தானே..
Rate this:
Cancel
chails ahamad - doha,கத்தார்
11-ஜூன்-202013:44:51 IST Report Abuse
chails ahamad அவரவர் மதம் அவரவருக்கு என்பதனை மதித்து பிறர் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மனிதாபிமானமாக இருந்திடும் என்பதை அனைவரும் உணர வேண்டும் , அதுபோதே நம்மில் பேதமில்லை நமக்குள் வேற்றுமையில்லை என்ற நல்லிணக்கம் வளரவும் , தொடர்ந்திடவும் வழி வகுக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும் .
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
11-ஜூன்-202016:20:55 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்அப்படியா ? அப்போ ஜி ஹா த் என்றால் என்ன பொருள் ? தனது கடவுளை, மதத்தை ஏற்காதவர்களை அரவணைப்பதுதானே ஜி ஹா த் ?...
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-ஜூன்-202016:22:51 IST Report Abuse
Cheran Perumalஆயிரக்கணக்கான வருடங்களாக இந்துக்கள் அதைத்தான் பின்பற்றி வருகிறோம். பின்னால் வந்த மதங்களும் நல்லிணக்கத்தை போதித்து அதன்படி நடந்தால் உறவுகள் பலப்படும்....
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
11-ஜூன்-202012:07:31 IST Report Abuse
dandy At least South African hindus have back bone but Tasmak Domilan allow those guys who insult this religion and get down from stage
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X