படிக்கட்டு துறையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் பாதிப்பு| Dinamalar

படிக்கட்டு துறையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் பாதிப்பு

Added : ஜூன் 11, 2020
Share
கரூர்: கரூரில் போதிய சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கியுள்ளது.கரூர் படிக்கட்டுதுறை, மூன்றாவது தெரு பகுதியில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில், போதிய சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் தேங்கியுள்ளது.இதுகுறித்து, படிக்கட்டு துறையை சேர்ந்த

கரூர்: கரூரில் போதிய சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கியுள்ளது.
கரூர் படிக்கட்டுதுறை, மூன்றாவது தெரு பகுதியில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில், போதிய சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் தேங்கியுள்ளது.

இதுகுறித்து, படிக்கட்டு துறையை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: அமராவதி கிளை வாய்க்கால் தற்போது, கழிவு நீர் வாய்க்காலாக மாறி விட்டது. கிளை வாய்க்காலையொட்டியுள்ள பகுதியான, படிக்கட்டு துறையில், சாக்கடை, வடிகால் வசதி இல்லை. இதனால், வீடுகளில் இருந்து நேரிடையாக, குழாய் மூலம் கழிவு நீரை கிளை வாய்க்காலில் விட ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில், வாய்க்காலுக்கு செல்லும் கழிவுநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டனர். இதனால், வீடு, கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளது. இதுகுறித்து, பல முறை புகார் தெரிவித்தும், நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். படிக்கட்டு துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் வசித்து வருகின் றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிக்கட்டுதுறையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, வாய்க்காலில் கொண்டு சேர்க்க, கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X