சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்

பெண்களின் பங்களிப்பு


கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், குளோரோபுளோரோ கார்பன் அதிகளவில் வெளியாவதால் உலகின் வெப்பநிலை உயர்கிறது. இவை பசுமை இல்ல வாயுக்கள் எனப்படுகிறது. இந்நிலையில் பசுமை இல்ல வாயுக்களின் அளவை குறைப்பதில் பெண்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் பெரும்பாலும் பொது போக்குவரத்து, நடை பயணம் ஆகியவற்றை அதிகம் மேற்கொள்கின்றனர். இதனால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படும் அளவு குறைகிறது.


தகவல் சுரங்கம்

முதல் அணுமின் நிலையம்


இந்திய அணுமின் கழகத்தின் கீழ் மஹாராஷ்டிராவில் செயல்படும் தாராபூர் அணுமின் நிலையம், இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் என அழைக்கப்படுகிறது. 1961ம் ஆண்டு இதன் கட்டுமானப்பணி தொடங்கியது. 1969 அக்., 28ல் தொடங்கப்பட்டது. துவக்கத்தில்
210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின் 160 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. பின் தலா 540 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு அணு உலைகள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் தற்போது 15 இடங்களில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X